Friday, November 11, 2011

வட பகுதியில் 1776 வீடுகளை இராணுவத்தினர் நிர்மானித்து முடித்துள்ளனர். யாழ் தளபதி

யுத்தத்தில் வீடுகள் அழிக்கப்பட்ட வட பகுதி மக்களுக்கு தற்காலிக வீட்டுப் பிரச்சினையை தீர்க்க இராணுவத்தினர் நிரந்தரமான வீடுகளை கட்டிக் கொடுக்கப் போவதாக யாழ் மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்தஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

வடக்குப் பகுதியில் 1776 வீடுகள் இராணுவத்தினர் நிர்மாணித்து முடித்துள்ளனர் என்று யாழ் மாவட்ட இராணுவத்தளபதி மகிந்தஹத்துருசிங்க தெரிவித்தார். மேலும் தமது படையினர் 2000 வீடுகளை மக்களுக்கு கட்டிக் கொடுக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.

பருத்தித்துறை, வெற்றிலைக் கேணி மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்தார். இராணுவத்தினரின் முயற்சியுடள் தன்னார்வத் தொண்டு நிறுவனம் வீடுகளை கட்டிக் கொடுப்பதாக மகிந்தஹத்துருசிங்க குறிப்பிட்டார்.

மூன்று லட்சம் ரூபா பெறுமதியான இந்த வீட்டை ஆறரை லட்சம் பெறுமதியாக அரசு மதிப்பிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த வீட்டுக்கு மொத்தமாக 53 கோடி 28 லட்சம் செலவழிக்கப்படுவதாகவும் தளபதி ஹத்துருசிங்க தெரிவித்தார்.

மீள்குடியேற்றப்பட்ட வடக்கு மக்களின் தற்காலிக வீட்டுப் பிரச்சினையை தீர்க்கவே இவ்வாறு வீட்டுத்திட்ட நடவடிக்கைகளில் தமது இராணுவத்தினர் இறங்கியிருப்பதாக குறிப்பிட்ட ஹத்துருசிங்க அடுத்த ஆண்டின் ஜனவரி மாத்தில் 2000 வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com