Thursday, November 17, 2011

நிர்வாக சேவையில் 500 வெற்றிடங்கள்.

நிர்வாக சேவையில் 500 வெற்றிடங்கள் நிலவுதாக அரச நிர்வாக மற்றும் சுதேச விவகாரம் தொடர்பான அமைச்சர் டப்லியூ.டி.ஜே செனவிரத்ன தெரிவித்தார். இதில் பிரதேச செயலாளர் பதவிக்கே கூடுதலாக வெற்றிடங்கள் உள்ளன. இன்று நிர்வாக சேவையில் அதிகமாக இருப்பவர்கள் மூன்றாம் தரத்தைச் சேர்ந்தவர்களே உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

நிர்வாக சேவையில் புதிதாக சேர்த்துக் கொள்வதற்காக தேவையான நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளதோடு நிர்வாக சேவையாளர் உத்தியோகஸ்தர்களுக்கான போட்டிப் பரீட்சை நடத்த ஆயத்தமாகவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்காக நிர்வாக உத்தியோகஸ்தர்கள் சேர்த்துக் கொள்வதற்கு வேறாகப் பரீட்சை நடத்துவதற்கு அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இதன் மூலம் அந்தப் பிரதேசங்களில் நிலவும் வெற்றிடங்கள் நிரப்பப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com