Monday, October 24, 2011

அழகு கலை நிலையங்கள் மீதான சோதனை இவ்வாரம் ஆரம்பம்

அழகு கலை நிலையங்கள் மீதான சோதனை இவ்வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது. நாடெங்கும் உள்ள அழகு கலை நிலையங்களை சோதனையிடும் நடவடிக்கைகள் இவ்வாரம் முதல் மேற்கொள்ளப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் பதிவு செய்யப்படாத வாசனை திரவியங்கள். மற்றும் அழகு கலை பொருட்கள் ஏராளமாக பயன்படுத்துவதன் காரணமாக அதன் மூலம் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதால் இவ்வாறு சோதனை நடவடிக்கைள் மேற்கொள்ளப்படவுள்ளன.

சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்து பதிவு செய்யப்படாத சட்டவிரோத அழகு சாதன பொருட்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்வது தொடர்பான தகவல்களும் வெளிவந்துள்ளன.

அழகு சாதன பொருட்கள் மற்றும் ஒளடத அதிகார சபையின் 3 ஆயிரத்து 800 அழகு சாதன பொருட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இலங்கையில் தற்போது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அழகு சாதன பொருட்கள் பயன்பாட்டில் உள்ளன. தரமற்ற அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு பாதிப்புக்கள் மற்றும் ஒவ்வாமை ஏற்படலாமென சுட்டிக்காட்டும் அதிகார சபை, அது தொடர்பாக எச்சரிக்கையாக இருக்குமாறு, மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com