தலைமறைவாகியிருந்த கராத்தே தம்மிக்க கடத்தப்பட்டார்?
படுகொலைகள், கொள்ளைகள் உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்படையவர் என கருதப்படும் கராத்தே தம்மிக்க என்ற பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொலன்னாவ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னர் தலைமறைவாக வாழ்ந்து வந்த இவர் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் ஆதரவாளர்களுக்காக பிரசாரங்களை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
ரம்புக்கன - வல்பொல பிரதேசத்தில் வைத்து இனந்தெரியாத கும்பலொன்று இவரை கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரபல பதாள உலகக் குழுத் தலைவர் கடுவெல வசந்த உள்ளிட்ட ஏழுபேரை படுகொலை செய்ததாக தம்மிக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment