கப்பம் கோரியோர் பொலிஸில் சரண் : துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
அகலவத்தை தம்பிலிகொட பகுதியில் ஒருவரைக் கடத்திச் சென்று ஒரு கோடி ரூபா கப்பம் கோரிய சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் மத்துகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். சந்தேக நபர்கள் மத்துகம நீதவான் தமிந்த ஆர். வேகபிடிய ..முன்னிலையில் ஆஜர் செயப்பட்ட போது அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இதேநேரம் தர்கா நகர் இந்திகஸ்வல பகுதியில் சட்ட ரீதியற்ற முறையில் துப்பாக்கி ஒன்றை தன் வசம் வைத்திருந்த ஒருவரை களுத்துறை குற்றப் புலனாவுப் பிரிவினர் கைது செதுள்ளனர்.
சந்தேக நபர் தொடங்கொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலதிக புலன் விசாரணை தொடர்கிறது.இதனுடன் தொடர்புடைய மத்துகம பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் ஏற்கனவே சந்தேகத்தின் பேரில் கைது செயப்பட்டு கடந்த 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment