தேவாலய ஆராதனையின் போது தனது இரு கண்களையும் தோண்டி எடுத்த நபர்-
(இத்தாலியில் பரபரப்பு) தேவாலயத்தில் ஆராதனைகள் இடம் பெற்றுக்கொணடிருந்த போது நபரொருவர் தனது சொந்த கண்களை தோண்டியெடுத்து அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இத்தாலியில் இடம்பெற்றுள்ளது.
வியரேக்கியோ பிராந்தியத்திலுள்ள சாந்த அன்றியா தேவாலயத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தையடுத்து கண்களை வெளியே தோண்டியெடுத்த அல்டோ பியன்சினி என்ற மேற்படி நபர் உடனடியாக வேர்சிலியா நகரிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதுபற்றி அவர் விபரிக்கையில் ஒரு குரல் ஒன்று எனது கண்களை
தோண்டி எடுக்கும் படி என்னிடம் கூறியது என்று தெரிவித்தார். இந்த நபருடைய கண்களை மீளவும் பொருத்தி அவருக்கு பார்வை ஏற்படுத்துவது சாத்தியமில்லாது உள்ளதாக தெரிவித்திருந்த மேற்படி மருத்துவமனையின் சத்திர சிகிச்சை நிபுணர்கள், அவர் வாழ்நாள் முழுவதும் குருடாக இருக்கநேரிடும் என நம்புவதாக கூறுகின்றனர்.
அல்டோ மன நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வேர்சிலியா மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்
ஜினோபர்பாக்சி விபரிக்கையில் எனது 26 வருட கால சேவைக்காலத்தில் இதுபோன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை காணநேர்ந்ததில்லை என்று கூறினார்
அன்டோ பியான்சினி அம்புலன்ஸ் வண்டியில் அவரது தாயாருடன் மருத்துவமனையை வந்நடைந்ததாகவும் தனது மகனுக்கு எவ்வாறாவது பார்வையை மீளப்பெற்றுத்தரும்படி அந்த தாய் கண்ணீh மல்க மருத்துவர்களிடம் கெஞ்சியமை நெஞ்சை உருக்கும் விதத்தில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தர்
0 comments :
Post a Comment