வடக்கில் சிங்களக் குடியேற்றமா? எங்கே? எப்பபோது என சரியாக கூறட்டும். கோத்தா
வடக்கில் சிங்களக்குடியேற்றமா? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தான் அடிக்கடி இப்படிக் கூறுகின்றனர். சிங்களவர் வடக்கில் குடியேற்றப்படுகின்றனர் என்று அவர்கள் தான் சொல்கிறார்கள்.எங்கே எப்படிக் குடியேற்றங்கள் என்று கூறட்டும் பார்க்கலாம். பொதுவாகக் கூறுவதைத் தவிர்த்து எங்கே எப்படி என்று பெயர் விவரங்களோடு அவர்கள் கூறட்டும்.இப்படிக் கூறினார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ. உள்ளுர் ஊடகம் ஒன்றுறுக்கு வழங்கியிருந்த நீண்ட செவ்வியில் சிங்களக் குடியேற்றம் குறித்த கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
கோத்தபாய இது குறித்து மேலும் கூறியதாவது;
நான் சிறிய வயதிலிருந்து யாழ்ப்பாணத்தில் இருந்தவன். 1974 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக நான் யாழ்ப்பாணத்தில் இருந்தவன். 74ஆம் ஆண்டு நான் யாழ்ப்பாணம் சென்றபோது பெருமளவான சிங்களவர்கள் இருந்தனர்.
யாழ். நகரத்தில், சுன்னாகத்தில், வவுனிக்குளத்தில், பூநகரியில், முல்லைத்தீவில் பெருமளவானோர் இருந்தனர். அவர்கள் இன்று எங்கே? அவர்களில் ஒருவர் கூட இல்லை. கூட்டமைப்பிடம் இதனைக் கேளுங்கள். கூட்டமைப்பு இவர்களை இப்போது கூப்பிட வேண்டும். வாருங்கள் என்று வரவேற்க வேண்டும்.
கொழும்பில் இன்று எத்தனை தமிழர்கள் அதிகரித்துள்ளனர். 80 ஆம் ஆண்டு காலப்பகுதியை விட எவ்வளவு பேர் இன்று அதிகரித்துள்ளனர்.ஏன் இந்த நிலை யாழ்ப்பாணத்தில் கொண்டு வரப்படக்கூடாது? ஏன் கிளிநொச்சியில் கூடாது? தாம் விரும்பும் இடங்களுக்குச் செல்லும் உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும்.
அம்பாந்தோட்டையைப் பாருங்கள். முன்னர் ஒரு தமிழர் கூட இருக்கவில்லை. இப்போது எத்தனை தமிழர்கள் இருக்கிறார்கள்? ஏன் இந்த நிலைமை? ஏன் இது நாடு முழுவதும் ஏற்படக்கூடாது? வேண்டிய ஒருவருக்கு வேண்டிய இடத்தில் வாழும் உரிமை இருக்கிறது. அந்த உரிமை வழங்கப்பட வேண்டும். அதுதான் தேவை என்றார்.
0 comments :
Post a Comment