அவுஸ்திரேலிய அகதி முகாமில் மோதல் இலங்கையர் உட்பட மூவர் காயம்.
வடஅவுஸ்திரேலியா அகதிகள் முகாமொன்றில் நேற்று முன்தினம் இரவு இரண்டு குழுக்களுக்கிடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு சபை தெரிவித்துள்ளது. அகதி முகாமில் இடம்பெற்ற இந்த மோதலில் ஒரு காவலாளியும் இரு அகதிகளும் காயமடைந்தனர். இதன் போது இலங்கை அகதி ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது. குறித்த இலங்கை அகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய அகதிகள் செயற்பாட்டாளர் இயன் ரின் டோல் தெரிவித்துள்ளார். மோதலை அடுத்து 700 பேர் வரை தங்கியிருந்த இந்த முகாமில் பதற்றம் நிலவியது.
0 comments :
Post a Comment