களனி கங்கையில் மூழ்கி மூவர் உயிரிழப்பு.
களனி கங்கையில் மூழ்கி மூவர் உயிரிழந்துள்ளனர். களனி கோனவல மற்றும் சிங்ஹாரமுல்ல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே கங்கையில் மூழ்கி மரணடைந்தவர்களாவர். களனி கங்கையில் குளிக்கச் சென்றிருந்த இருவர் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இவர்கள் களனி கோனவல பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 29 வயதுடைய இருவராவர்.
இந்நிலையில், களனி கங்கையில் மூழ்கியவர்களின் உடல்களைக் கண்டுபிடிக்க முற்பட்ட ஒருவரும் இன்று முற்பகல் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். நிரில் மூழ்கி உயிரிழந்த முவரினதும் உடல்கள் இன்று காலை எட்டு மணியளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment