Saturday, October 8, 2011

நீர்கொழும்பு மாநகர சபைக்கான தேர்தல்

நீர்கொழும்பு மாநகர சபைக்கான தேர்தல் இன்று சனிக்கிழமை இடம் பெறுகிறது. இன்று இடம் பெறும் வாக்களிப்பின் போது 68 வாக்களிப்பு நிலையங்களில் ஒரு இலட்சத்து 293வாக்களார்கள் வாக்களிக்வுள்ளனர். நீர்கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஒன்பது கட்சிகளும் நான்கு சுயேட்சை கட்சிகளும் போட்டியிடுகின்றன.

இன்று காலை கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் உட்பட மேல்மாகாண சபை அமைச்சரும் முன்னாள் நீர்கொழும்பு மேயருமான நிமல்லான்சா ஆகியோர் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிப்பதை எமது கமராவில் படம்பிடித்துக் கொண்டோம்.

இங்கு மேல்மாகாண சபை அமைச்சரும் முன்னாள் நீர்கொழும்பு மேயருமான நிமல்லான்சா கருத்து தெரிவிக்கையில். எமது கட்சி 17 ஆசனங்களை பெற்று வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான வேட்பாளர் ரொயிஸ் விஜித்த கருத்து தெரிவிக்கையில் எமது வெற்றி நிச்சயமானது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தரப்பினர் தேர்தல் சட்ட விதிகளை மீறும் வகையில் நேற்று இரவு கூட வீதி புனரமைப்பு வேலைகளில் ஈடுபட்டனர் என்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான வேட்பாளர் ரொயிஸ் விஜித்த, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான வேட்பாளர் தயான் லான்ஸா, மேல்மாகாண சபை அமைச்சரும் முன்னாள் நீர்கொழும்பு மேயருமான நிமல்லான்சா , ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் தமிழ் வேட்பாளரான சஜித் மோகன் ஆகியோர் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்களிக்கச் சென்ற போது எடுக்கப்பட்ட படங்கள் உட்பட மேலும் சில படங்கள் இங்கு தரப்பட்டுள்ளன.









0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com