Thursday, October 27, 2011

வேஷம் கலைந்தது. ஹெரோயின் கடத்திவந்த பாக்கிஸ்தானிய பெண்கள் இருவர் கைது.

ஹெரோயின் போதைப்பொருள் 60 உருண்டைகளை உடம்பினுள் மறைத்து வைத்து விமானம் மூலமாக கடத்தி வந்த இரு பாகிஸ்தான் பெண்களை நீர்கொழும்பு பதில் நீதவான் தீபால் பெரேரா ஏழு தினம்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு இன்று உத்தரவிட்டார். ஜசிந்த அலி, பைரா ரபீக் மலிக் என்ற இரு பாகிஸ்தானிய பெண்களே தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டவர்களாவர்.

சந்தேக நபர்களான இரு பெண்களும் திங்கட்கிழமை (24)இரவு கராய்ச்சியில் இருந்து விமானம் மூலமாக கட்டநாயக விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். சந்தேக நபர்களான இரு பெண்களும் 38 , 43 வயதுடையவர்களாவர். ஒரு பெண் கற்பிணி போல நடித்துள்ளார் மற்றய பெண் இரு சிறுவர்களுடன் வந்துள்ளார். இருவர் தொடர்பிலும் சந்தேகம் கொண்ட விமான நிலைய அதிகாரிகள் அவர்களை விசாரணை செய்த போது உடம்பில் மறைத்து வைத்து போதைப்பொருள் கடத்தி வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து இரு பெண்களும் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர் அங்கு வைத்து இரு பெண்களும் தமது உடம்பினுள் மறைத்து வைத்து கடத்தி வந்த போதைப்பொருள் உருண்டைகள் அவர்களின் குத வழியாக வெளியே எடுக்கப்பட்டுள்ளன.

ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து 38 போதைப்பொருள் உருண்டைகளும் இன்னொரு பெண்ணின் வயிற்றிலிருந்து 22 பொதைப்பொருள் உருண்டைகளும் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பு போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் நேற்று புதன்கிழமை நீர்கொழும்பு பதில் கடமையாற்றும் நீதவான் தீபால் பெரேரா முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோதே இருவரையும் தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

1 comments :

Anonymous ,  October 27, 2011 at 4:26 PM  

It has been a regular practice among Pakistanis irrespective of their gender and age. Even if the person concerned is 2 or 3 years old or even 80 or 9o years old, they should be checked without any exception. It is not only the foreign exchange is going out in trillions a year, but also this poisonous stuff deteriorate the health and wealth of our Sri Lankan people. Therefore every Pakistanis coming to Sri Lanka should be checked without any exception. If it is money, Pakistanis will not hesitate even to kill a person without any mercy.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com