அரச நிர்வாக சேவையிலுள்ள வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படுமாம்.
நிர்வாக உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்ப, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் டபிள்யு.டி.ஜே. செனவிரட்ன தெரிவிக்கிறார். பல அரச நிறுவனங்களில் 2 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட நிர்வாக உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக, பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவிக்கிறது. இவ்வெற்றிடங்களை இரண்டு வருடங்களுக்குள் பூர்த்தி செய்யவிருப்பதாக, அமைச்சர் டபிள்யு.டி.ஜே. செனவிரட்ன தெரிவித்தார்.
கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய பல்வேறு காரணங்களினால், நிர்வாக சேவைக்கான போட்டிப் பரீட்சைகள், உரியவாறு இடம்பெறவில்லை. இதனால், இச்சேவைக்கு சேர்த்துக்கொள்ளும் ஒழுங்கு விதிமுறைகளை பேணுவதற்கு முடியாமல் போனதாக, அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்
. போட்டிப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்றுக்கொள்வோர், நிர்வாக சேவைக்கு சேர்த்துக்கொள்ளப்படுவர். இதன் முதல் கட்டமாக, சிங்கள மொழி மூலம் 100 பேரையும், தமிழ் மொழி மூலம் 60 பேரையும் இணைத்துக் கொள்ளவிருப்பதாக, அமைச்சர் டபிள்யு.டி.ஜே. செனவிரட்ன மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment