அவுஸ்திரேலிய அகதி முகாமில் இடம்பெற்ற சண்டையில் தமிழ் இளைஞனுக்கு காயம்.
வட அவுஸ்ட்ரேலியாவில் அமைந்துள்ள இடம்பெயர்ந்தோர் வாழும் குடியிருப்பு மத்திய நிலையத்தில் ஏற்பட்ட சண்டையில் இலங்கையை சேர்ந்த தமிழர் அகதி ஒருவர் காயமடைந்துள்ளதாக தூதுவராலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் குடியிருப்பு மத்திய நிலையத்தில் இணையத்தளங்கள் பாவனை சேவை ஈடுபடுவது தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு நீண்டதால் உருவெடுத்த இந்த சண்டையின் போது இலங்கையைச் சேர்ந்தவர் காயமடைந்துள்ளார்.
அவுஸ்ட்ரேலியாவில் சட்டவிரோதமாக இடம்பெயர்ந்தோர் 700க்கும் மேற்பட்டவர்கள் இங்கு வாழுகின்றனர். இந்த மத்திய நிலையத்தில் ஏற்பட்ட இந்தப் பிரச்சினையில் அப்கானிஸ்தான், ஈரான். மற்றும் இலங்கையர்கள் 100 பேர் அளவில் பங்கு கொண்டனா. காயமடைந்த இலங்கை அகதி சண்டையில் பங்கு கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த இலங்கை அகதி தற்போதுவரை சிகிச்சைக்காக வட அவுஸ்ட்ரேலியா வைத்தியசாலையில் உட்படுத்தியுள்ளதாகவும் அவர் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment