கிளர்ச்சியாளர்களின் பின்னணியில் வெளிநாட்டு ஒற்றர் சேவையினர் - லால்காந்த
மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சியாளர்களின் பின்னணியில் இந்திய ரோ புலனாய்வு பிரிவினர் உட்பட வெளிநாட்டு ஒற்றர் சேவையினர் இருப்பதாக அந்தக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லால்காந்த குறிப்பிட்டுள்ளார். வார இறுதி பத்திரிகையொன்றிற்கு லால்காந்த வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிளர்ச்சியாளர்களின் செயற்பாடுகள் கண்காணிக்கப்பட வேண்டும். மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிரிகள் பலர் உள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி, சில வலதுசாரி கட்சிகள், இந்தியா, சி.ஐ.ஏ. மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் போன்றன எமது கட்சியை எதிரிகளாகப் பார்க்கின்றனர்.
புதிய கிளர்ச்சியாளர்கள் இவர்களுடன் கொண்டுள்ள தொடர்புகள் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் லால்காந்த அந்த செவ்வியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment