தமிழ்-முஸ்லிம் சமூகம் அரசியல் அனாதைகளாக மாறிவிடக்கூடாதாம்! கூறுகிறார் ஏ.சத்தார்
எத்தகைய இடர்கள் வந்தாலும் தமிழ்-முஸ்லிம் சமூகம் தமது அரசியல் இலாபத்திற்;காக உரிமைகளை எந்தக் கட்சிக்கும் தாரை வார்க்கக் கூடாது உறுதியாக துணிந்து நின்று நிதானமாக செயல்படுவதன் மூலமே எமது அபிலாசைகளை பெற்றுக்கொள்ள முடியும். உயர்ந்து நிற்கவும் முடியும். நாங்கள் அரசியல் அனாதைகளாக மாறிவிடக்கூடாது என்று நீர்கொழும்பு மாநகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் இலக்கம் 31 இல் போட்டியிடும் ஆர்.ஏ.ஸத்தார் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) கூறினார்
நீர்கொழும்பு –பெரியமுல்லையில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்சொன்னவாறு குறிப்பிட்டார்,
வேட்பாளர் ஸத்தார் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது, நீர்கொழும்பு மாநகர சபைதேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளராக முதன்முறையாக நான் போட்டியிடுகிறேன் என்னை தெரிந்தவர்களும் புரிந்தவர்களும் அறிந்தவர்களும் என்னை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே உண்டு.
வறுமையை ஒழிக்க முடியும் வறுமை நீங்கி எதிர்கால சந்ததியினரின் வாழ்வு ஒளிபெற என்னோடு ஒத்துழைக்க வருமாறு எல்லோருக்கும் அழைப்பு விடுகிறேன் மக்கள் சேவைக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட உறுதிபூண்டுள்ளேன் எனக்கு பெரியமுல்லை, கம்மல்துறை, காமச்சோடை உட்பட சகல பகுதிகளிலும் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்களின் ஆதரவு
கிட்டும் என்று நான் நம்புகின்றேன் என்றார்.
0 comments :
Post a Comment