தமிழ் பகுதி தெருவிளக்குகளை முஸ்லிம் பகுதிக்கு தாரை வாற்ற நகர சபை உறுப்பினர்கள்.
சாமி கொடுத்தாலும் ஐயன் விடமாட்டான் என்ற அவலநிலை தமிழ் மக்களுக்கு தொடர்ந்த வண்ணமே உள்ளது. கல்முனை பிரதேச சபை தற்போது நகர சபையாக தரமுயர்த்தப்பட்டுள்ளதுடன் கல்முனையிலிருந்து பெரியநீலாவணை வரையான பிரசேமும் மறுபுறம் சாய்ந்தமருது வரையான பிரதேசமும் நகர சபைக்குரிய பிரதேசங்களாகின.
இதனடிப்படையில் கல்முனை நகரசபைக்கு அதிவெளிச்சம்கொண்ட தரமான தெருவிளக்குகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் இத்தெருவிளக்குகள் பாண்டிருப்பு தொடக்கம் பெரியநீலாவணை வரையிலான பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.
கல்முனை நகரப்பிரதேசம் சாய்ந்தமருது, கல்முனைக்குடி ஏன் பாண்டிருப்புக்கும் பெரியநீலாவணைக்கும் இடையேயுள்ள மருதமுனை வாழ் முஸ்லிம் மக்கள் பால் போன்ற வெளிச்சத்தில் இருக்கும்போது பாண்டிருப்பு பெரியநீலாவணை வாழ் தமிழ் மக்கள் அன்றுபோல் இன்றும் கிராமசபை தராதரத்துக்குரிய மங்கலான விளக்குகளின் கீழேயே காலம் கடத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.
நகர சபைக்கென ஒதுக்கப்பட்ட விளக்குகளை தத்தமது பிரதேசங்களுக்கென பிரித்துகொடுக்கும் செயற்பாடுகளின்போது, தமிழ் பிரதேங்களை சேர்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நகர சபை உறுப்பினர்கள் குறிப்பிட்ட விளக்குகளை நிந்தவூர் மாளிகைக்காடு பிரதேங்களுக்கு தாரைவாற்று தமது பைகளை நிரப்பிக்கொண்டுள்ளமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கல்முனை நகர சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைபு உறுப்பினர்களின் ஒப்புதலுடன் பாண்டிருப்பு தொடக்கம் பெரியநீலாவணைவரைகுமான வெளிச்ச விளக்குகள் நிந்தவூர் மாளிகைக்காடு பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவர்களின் இவ் ஈனச் செயல் தொடர்பாக, பிரதேசத்தில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நெடும்கால செயற்பாட்டாளரான பன்னீர்செல்வம் என்பவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், மாவை ஆகியோரிடம் முறையிட்டபோது, அவர்கள் தேர்தலுக்காக ஏதாவது செலவு செய்திருப்பார்கள், அவற்றை மீட்டுக்கொள்ளும்பொருட்டு இதனை செய்திருக்கலாம், நீங்கள் அதை கண்டுகொள்ளவேண்டாம் என தலைவர்கள் கூறினார்களாம்.
தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்கப்போகின்றோம், எங்களுக்கு வாக்களியுங்கள் என பதவிகளை பெற்றுக்கொண்டு பின்னர் தமிழ் மக்களின் உரிமைகளை ஏலத்தில் விற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு இதுவும் உதாரணம்.
2 comments :
தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்குமட்டும், தமிழ் பிரதேசங்கள் ஒருநாளும் முன்னேறாது
ஐயா Anonymous, நீங்கள் உங்க பெயரை மட்டும் போட்டு இதை சொல்லியிருந்தால் நீங்கள் எந்த தேசத்தில் இருந்தாலும் உங்கட வாயில சீனி போடால் சாக மாட்டேன்.
றூபன்
Post a Comment