எண்ணைவள அகழ்வாராட்சியில் எரிவாயு கண்டுபிடிப்பு பெற்றோலும் வருமாம்.ஜனாதிபதி
நமது நாட்டில் நடைபெறும் எண்ணைவள அகழ்வாராட்சியில் முதலாவது கட்டமாக எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இத்துறையில் நம்மோடு ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நாட்டிற்கும் கண்டி மக்களுக்கும் மிகவும் மகிழ்ச்சி தரும் இச்செய்தியை கண்டியில் இருந்து தெரிவித்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
இரண்டாவது கட்டமாக மேற்கொள்ளவிருக்கும் அகழ்வாராட்சியில் பெற்றோலும் கிடைக்கும் என நம்புவொமாக. தெய்வம்களின் அனுக்கிரகத்தாலும் ஸ்ரீ தலதா புத்தபெருமானின் பேரருளாலும் நான் இந்த செய்தியை தெரிவித்து கொள்வதில் மீண்டும் பெருமகிழ்வடைவதாக அவர் மேலும் கூறினார்.
நேற்று கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற கண்டி மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக நடைபெற்ற கூட்டம் ஒன்றிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார் இக்கூட்டம் கண்டி மாநகர சபை ஊழியர்கள், சேவகர்கள், அதிகாரிகளுக்காக நடைபெற்றது. இதில் பிரதமர் ஜயரட்ன, விளையாட்டுதுறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக மற்றும் ஆளுனர் டிக்கிரி கொப்பேகடுவ உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment