Sunday, October 2, 2011

அடுத்த 60 ஆண்டுகளில் உயிரிழப்புகள் அதிகரிக்கும்: ஆய்வாளர்கள் தகவல்

அடுத்த 60 ஆண்டுகளில் ஓசோன் மாசுபாட்டால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் பூமி வெப்பமயமாதலால் பருவநிலை சீர்கேடுகள் ஏற்படும் அதனால் நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக பெல்ஜியம் பிரான்ஸ், ஸ்பெயின் போர்த்துக்கல் உள்ளிட்ட நாடுகளில் இத்தகைய பாதிப்புகள் அதிகம் இருக்குமாம். அங்கு இறப்பு வீதம் 10 முதல் 14 சதவீதம் அதிகரிக்கும் என்கின்றனர்.

ஓசோன் மாசுபாடு பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் இந்த சதவிகிதம் அதிகமாக இருக்காது என்ற ஆறுதுல் தகவலையும் கூறுகின்றனர்.

ஈரோப்பியன் ரெஸ்பிரேடரி சங்கம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆயிவில் தெரிய வந்துள்ள தகவல்கள் வருமாறு, ஓசோன் ஸ்ட்ராரோஸ்பியர் பகுதியில் உள்ளது புற ஊதாக்கதிர்கள் பூமியை தாக்காமல் பாதுகாப்பது. இதுதான் இந்தக்கதிர்கள் பூமியை நேரடியாக தாக்கும் போது பூமியில் வெப்பம் அதிகரிப்பதோடு மனிதர்களுக்கு பல்வேறு நோய் பாதிப்புக்கள் ஏற்படும்.

இத்தகைய தாக்குதல்களில் இருந்து உயிரினம்களுக்கு பாதுகாப்பை அளிக்கும் ஓசோன் படலத்தில் ஓட்டைகள் விழத்தொடங்கியுள்ளது குறித்து விஞ்ஞர்னிகள் அவ்வப்போது எச்சரித்து வருகின்றனர்.

பூமி வெப்பமயமாதல் பனிப்பாறைகள் உருகுவது மற்றும் அதனால் நீர்மட்டம் உயர்ந்து வருவது குறித்து தொடர் எச்சரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. ஓசோன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் உலகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வளவு எச்சரிக்கை விழிப்பணர்வையும் மீறி இதேநிலை நீடிக்கும் பட்சத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்பது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. நுரையீரல் பாதிப்புகளால் சுவாசிப்பதில் சிக்கல் ஆஸ்துமா உள்;ளிட்ட பாதிப்புகள் அதிகரிக்கும் சாத்தியம்கள் அதிகம்.

இந்நிலையில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள ஓசோன் படலம் மேலும் சேதமடையாமல் பாதுகாக்க வேண்டும். இதற்கு ஒவ்வொரு தன்நபரின் பங்களிப்பும் இருக்கவேண்டியது அவசியம் என்கிறது ஆசாய்ச்சி.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com