தூக்குத்தன்டனையை எதிர்நோக்கும் 800 குற்றவாளிகள் இலங்கையில்.
குறைந்த பட்சம் 800 குற்றவாளிகள் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை எதிர்நோக்கியுள்ள நிலையில் தூக்குத்தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கு ஆட்களை சேர்க்க அரசாங்கம் விரும்புவதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
1976 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் மரண தண்டனைகள் விதிக்கப்படாத நிலையில் 2004ஆம் ஆண்டு முதல் பாலியல் வல்லுறவு , போதைப்பொருள் கடத்தல், தொலைக்குற்றம்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்நிலையில் அலுகோசு பதவியிலிருந்த இருவரும் பதவி உயர்வு பெற்றுள்ளதால் அலுகோசு பதவி வெற்றிடமாக உள்ளதாகவும் அவர் கூறினார். இப்பதவியை வெற்றிடமாக வைத்திருக்க முடியாதென்பதால் அடுத்த வாரம் இப்பதவிக்கு விண்ணப்பம்களை கோரவுள்ளதாகவும் அவர் கூறினார்.
கொலைகள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றம்களுக்காக குறைந்த பட்சம் 800 பேர் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் கூறினார் ஆனால் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு ஜனாதிபதி கையெழுத்து இட வேண்டும் எனவும் ஏ.திசாநாயக கூறினார்.
0 comments :
Post a Comment