JVP யின் பிளவு ஒரு பகுதியினரை புலிகளுடன் செல்ல நிர்பந்திக்கின்றது. பேராசிரியர் சமர விக்கிரம
ஜே.வி.பி யினால் ஏற்பட்டுள்ள பிளவை நாட்டுக்கும் அரசாங்கத்துக்கும் ஆபத்தான ஒன்றாகவே கருதுகிறேன்-
மக்கள் விடுதலை முன்னணி இரண்டாக பிளவு பட்டுள்ளதன் காரணமாக ஒரு பிரிவினர் எதிர்கட்சியுடனும் இன்னொரு பிரிவினர் புலிகள் இயக்கத்துடனும் செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளது. அந்தக்கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவை நாட்டுக்கும் அரசாங்கத்துக்கும் ஆபத்தான ஒன்றாகவே கருதுகின்றேன் என்று அரசியல் விமர்சகரும் அரசியல துறை தொடர்பான சிரேஸ்ட பேராசிரியருமான காமினி சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் மேற்சொன்னவாறு குறிப்பிட்டுள்ள பேராசிரியர் காமினி சமரவிக்கிரம தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ஆயுதம் தரித்த குழுவினர் இந்தநாட்டில் மீண்டும் கிளர்ச்சியை ஏற்படுத்துவார்கள் என்று நான் நினைக்கவில்லை, அப்படி நடக்க வேண்டும் என நான் கருதவும் இல்லை. ஜே.வி.பி யின் இரு பிரிவினரும் இரவில் ஒரு வேடம் பகலில் ஒரு வேடத்தில் நடிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.
ஆயுத கிளர்ச்சி மூலம் நாட்டை கைப்பற்ற கூடிய நிலை இல்லை. இருந்த போதிலும் சர்வதேசத்தின் அரசியல் அபிலாசைக்கு இணங்க சிலர் இதனை முயற்சிக்கின்றனர். இதில் ஒரு பிரிவினர் லிபியாவில் ஏற்பட்ட புரட்சியைப் போல இங்கு ஏற்படுத்த முயற்சிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment