Thursday, October 6, 2011

தெஹிவல ரயில் குண்டு : 2 பொறியலாளர்களுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்.

கடந்த 2008 ம் ஆண்டு தெஹிவல ரயிலில் இடம்பெற்ற குண்டுவெடிப்புடன் தொடர்புடைய இரு பொறியிலாளர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகை கொழும்பு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யபட்டுள்ளது. கொழும்பு ராஜகிரியவிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த முல்லைத்தீவு முள்ளியவளைபிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய பாலசுப்பிரமணியம் மற்றும் அவரது உதவியாளரான நெல்லியடி பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய கனகராஜா நிசாந்தன் என்ற இருவருக்கும் எதிராகவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் குறிப்பிட்ட ரயிலில் குண்டினை பொருத்தினார்கள் எனக் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளதுடன் அதற்கு பயன்படுத்தப்பட்ட றிமோட்கொன்றோல் உட்பட 14 தடயங்கள் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவர்களுக்கு எதிரான சாட்சியங்களாக 32 பேர் வரிசைப்படுத்தப்பட்டுளனர்.

இக்குண்டுவெடிப்பில் ஒரு கர்பிணித் தாய் உட்பட 10 சிவிலியன்கள் உயிரிழந்தும் 73 பேர் காயமடைந்தும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும் .


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com