Saturday, September 10, 2011

வைகோவின் MDMK வளர புலிகள் நிதியுதவி அளித்தனர் - விக்கிலீக்ஸ் அதிர்ச்சித் தகவல்!

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வை.கோபாலசாமி 1993ம் ஆண்டு விலகியதன் பின்னர் அவர் தலைமையில் மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தை வளர்த்தெடுக்க தமிழீழ விடுதலைப் புலிகள் வைகோவுக்கு நிதியுதவி அளித்ததாக சர்ச்சைக்குரிய விக்கிலீக்ஸ் இணையத்தை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2006ம் ஆண்டு மே 15 திகதி தமிழக ஆட்சியை திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றியதன் பின்னர் இரண்டு நாட்கள் கழிந்து விக்கிலீக்ஸ் இணையத்திற்கு இத்தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவுக்கான அப்போதைய இந்திய பதில் கொன்சூலர் ஜெனரல் ரவி கந்ததாய் (Ravi Candadai) இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

எனினும் புலிகள் வைக்கோவுக்கு நிதியுதவி வழங்கியதை உறுதிப்படுத்த ஆதாரங்கள் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருந்தபோதும் தமிழர்கள் நன்கு அறிந்த தமிழ்நாட்டில் வசித்த இலங்கை தமிழரான ஈழ அகதிகள் புனர்வாழ்வு அமைப்பின் நிறுவுனர் சந்திரஹாசன் மூலம் தான் இத்தகவலை தெரிந்து கொண்டதாக பதில் கொன்சூலர் ஜெனரல் ரவி கந்ததாய் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கனடா, பிரித்தானியா, நெதர்லாந்து மற்றும் ஜேர்மன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் அவர்கள் இருந்த நாட்டில் செயற்பட்ட தமிழர் கலாசார அபிவிருத்தி நிலையம், சமய மத்திய நிலையங்கள் ஊடாக தங்களது மாதாந்த சம்பளத்தில் 10 வீதத்தை உதவியாக அளித்துள்ளனர்.

இந்த செயலாளனது கிட்டத்தட்ட கப்பம் வழங்குவதற்கு நிகர் என பதில் கொன்சூலர் ஜெனரல் ரவி கந்ததாய் விமர்சித்துள்ளதாக விக்கிலீக்ஸ் இணையத்தை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1 comments :

Anonymous ,  September 10, 2011 at 5:22 PM  

Tamil proverb says that the braid of "Solian" will never dance
without no reason.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com