கோழியில் புழுக்களுடன் Freidrice விற்ற ஹோட்டல்காரருக்கு அபராதம். ஹோட்டல் சீல்
மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற புழுக்களை கொண்ட பொரித்த கோழி இறைச்சியுடன் ப்ரைட்ரைஸ் விற்பனை செய்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட ஹோட்டல் உரிமையாளருக்கு நீர்கொழும்பு மேலதிக நீதவான் ஏழாயிரம் ரூபா அபராதம் விதித்தார். முஹம்மத் சரீம் முஹம்மத் உசைன் என்பவரே குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு அபராதம் விதிக்கப்பட்டவராவார்.
நீர்கொழும்பு –பெரியமுல்லை பிரதான வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் செவ்வாய்கிழமை மாலை கொழும்பை நோக்கி வாகனத்தில் சென்று கொண்டிருந்த குழுவொன்று உணவு உட்கொள்வதற்காக சென்றுள்ளனர் இதன்போது அவர்கள் ஓடர் செய்த ப்ரைட்ரைசில் வைக்கப்பட்டிருந்த பொரித்த கோழியில் புழுக்கள் இருந்துள்ளன இதுதொடர்பாக அவர்கள் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து
நீர்கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் கொலிசாருடன் சென்று நுகர்வுக்கு பொருத்தமில்லாத உணவுப்பொருட்களை கைப்பற்றியதுடன் தற்காலிகமாக அந்த ஹோட்டலையும் சீல்வைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பொதுசுகாதார பரிசோதகர்களால் ஹோட்டல் உரிமையாளர் நீர்கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றில் இன்று ஆஜர் செய்யப்பட்டார். இதன்போது மேலதிக நீதவான் துலானி எஸ். வீரதுங்க ஏழாயிரம் ரூபா அபராதம் விதித்தார்
மனித நுகர்வுக்கு பொருத்தமில்லாத புழுக்களை கொண்ட பொரித்த கோழி இறைச்சியுடன் ப்ரைட்ரைஸ் விற்பனை செய்ததாக ஹோட்டல் உரிமையாளர் மீது குற்றம்சுமத்தப்பட்டிருந்தது
0 comments :
Post a Comment