Thursday, September 29, 2011

புலிகளைத் தண்டிக்க புதிய சட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும்-ரொஹான் குணரட்ன!

புலிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களை தண்டிப்பதற்கு அரசாங்கம் புதிய சட்டங்களை அமுல்படுத்த வேண்டுமென சர்வதேச பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். புலிகள் யுத்த ரீதியாக இலங்கையில் தோற்கடிக்கப்பட்ட போதிலும் வட அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் வலுவாக இயங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாடு கடந்த தமிழீழ இராச்சியம் போன்ற புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களை இல்லாதொழிப்பதற்கு இலங்கை அரசாங்கமும், அமெரிக்காவும் கூட்டாக இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் வீ.ருத்ரகுமாரன் தொடர்ந்தும் வன்முறை வழிமுறைகளில் நாட்டம் காட்டி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

அமெரிக்காவில் மிகவும் சிறந்த நீதிக் கட்டமைப்பு காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், தீவிரவாதிகள் இதனை துஸ்பிரயோகம் செய்யக் கூடும் எனவும், பின் லேடனின் மனைவி அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கேணல் ரமேஷின் மனைவியினால் அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அல் கய்தா இயக்கத்தினரைப் போன்று புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் உலக அளவில் பிரச்சாரம் செய்யப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

உலகப் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு புலிகள் பாரியளவு பங்களிப்பினை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிரான இலங்கையின் பிரச்சார உத்திகள் காத்திரமானதாக அமையவில்லை எனவும், குறிப்பாக மேற்குலக நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கம் உரிய முறையில் பிரச்சாரம் செய்யத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

புலிகளுக்கு எதிராக சர்வதேச ரீதியில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதனை இலங்கை அரசியல்வாதிகள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

இராஜதந்திர, சட்ட மற்றும் அரசியல் ரீதியாக முறியடிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

தாருஸ்மன் அறிக்கை ஒரு பக்கச்சார்பான அறிக்கையாகவே நோக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மூச்சுத் திணறும் புலிகளுக்கு ஒட்சிசன் வழங்கும் ஓர் நடவடிக்கையாகவே இந்த அறிக்கையை நோக்க முடியும் என அவர் குறிப்பிட்டு;ள்ளார்.

புலிகளின் தலைவர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் தருணத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குவது முட்டாள்தனமானது என அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டுமென வலியுறுத்தும் தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களை அரசாங்கம் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் எனவும், சில வேளைகளில் குறித்த தரப்பினருக்கு புலிகள் நிதி வழங்கியிருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகளின் சர்வதேச தலைவர்கள் மக்களின் நலனைக் கருத்திற் கொள்ளாது செறய்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

பிரபல ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

1 comments :

ARYA ,  September 29, 2011 at 3:57 AM  

Not only enough rules , LTTE and TNA knows how can manage any rules, they doing its a long time, only need a pistol group agains LTTE and TNA, JUST SPOT JUSTICE.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com