Friday, September 2, 2011

சுவிற்சர்லாந்தில் தமிழர் குழந்தைகள் மீது கடும் அழுத்தத்தை பிரயோகிக்கின்றனர். ராஜ்குமார்

சுவிற்சர்லாந்தில் தமிழ் இளைஞர்கள் அடிதடியில் ஈடுபடுவது தொடர்பாக அந்நாட்டின் பத்திரிகைள் பலவும் விமர்சனங்களை முன்வைக்கின்ற நிலையில், அங்கு Familientherapeut ஆகவுள்ள ராஜன் ராஜ்குமார் என்பவர் சில வாரங்களுக்கு முன்னர் Tagesanzeiger எனும் பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியில் சுவிற்சர்லாந்தில் தமிழர்களுக்கு அவர்களுடைய வெளிப்பார்வையே முக்கியம் எனவும் ஒரு குழந்தையின் பலம் என்ன அக் குழந்தையினால் என்ன முடியும் என்பதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

பேட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு.

தமிழ் இளைஞர்கள் அடிக்கடி அடிதடியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவ்வாறான பல இளைஞர்களை அறிந்திருப்பீர்கள். எங்கு இந்த பிரச்சினை உள்ளது?

இதை நான் 3 பிரிவாக விமர்சிப்பேன். பொலிஸார் தமது கடமைகளை நேர்த்தியாக செய்கின்றனர்.ஆனால் சட்ட மா அதிபர் திணைக்களகமும், நீதிமன்றுகளும் கடினமான தண்டனையை அடிதடிக்காரர்களுக்கும் அதன் பின்னணியில் உள்ளோருக்கும் வழங்கவேண்டும்.

இரண்டாவது - தமிழ் இளைஞர் யுவதிகள் பெற்றோரின் பாரிய அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே பெற்றோர் தாம் தம் குழந்தைகளை வழர்க்கும் முறையை மீள்பரிசீலனை செய்யவேண்டும்.

மூன்றாவது - தமிழ் சமூகம் இதன் விளைவுக்கு எதிராக தெளிவாகவும் உறுதியாகவும் நிற்கவேண்டும்.

தமிழ் சமூகம் என்னதான் செய்யலாம்?

இங்கு இடம்பெறுகின்ற விடயங்கள் ஆரோக்கியாமானதாக இல்லை என்பதை மக்கள் உரத்துச் சொல்லவேண்டும். அது நிச்சயமாக உதவும். தமிழர்கள் தங்களுக்குள் அதிகம் பேசிக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் அச்சந்தர்ப்பங்களில் எல்லாவற்றுக்கும் மேலாக வதந்திகளை பகிர்ந்து கொள்கின்றார்கள். எவரும் வெளிப்படையாக இல்லை.

நீங்கள் தமிழ் குடும்பங்களிலுள்ள அழுத்தம் தொடர்பாக பேசுகின்றீர்கள், அதைப்பற்றி என்ன கருதுகின்றீர்கள்?

பெற்றோர்கள் மிக,மிக அதிகமாக வேலை செய்கின்றபோதும் அவர்களிடம் போதிய பணம் இல்லை எனவே பெற்றோருக்கு கௌரவத்தை கொண்டுவரும் பொருட்டு குழந்தைகள் சிறந்த கல்வியை மேற்கொள்ளவேண்டுமென எதிர்பார்கும் தமிழ் பெற்றோர் அவ்வாறு இடம் பெறாவிட்டால் அல்லது ஏதேனும் தவறை குழந்தைகள் செய்துவிட்டால் அவர்களை மன்னிப்பதை விடுத்து எங்களுக்கு அவமானத்தை பெற்றுத்தந்துவிட்டாய் என குழந்தைகளை குற்றஞ்சாட்டுவார்கள்.

அவர்களுக்கு வெளிப்பார்வையே முக்கியம். ஒரு குழந்தையின் பலம் என்ன அக் குழந்தையினால் என்ன முடியும் என்பதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.

பெற்றோரை திருப்திப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் குழந்தைளிடம் இல்லையா?
அது இப்படித்தான். பல குடும்பங்களில் சண்டைகள் உக்கிரமாகும் வேளை. சில சமயங்களில் நாங்கள் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து கொண்டு செல்ல நேரிடும்.

பெற்றோர்கள் உதவிகளை பெறுகிறார்கள் இல்லையா?

அவர்கள் வழர்ந்துள்ள முறை இங்கு நடைமுறயாகாது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்கிறார்கள் இல்லை. உதவியை ஏற்றுக்கொள்வதற்கு கஷ்டப்படுகின்றார்கள். விளக்கமில்லாத தருணத்தில் அவர்கள் வழர்ந்த நடைமுறைக்கு திரும்பிச் செல்கிறார்கள்.


அவர்கள் வழர்ந்த விதம் சிறிலங்காவில் நன்கு நடைமுறைப்படுகின்றதா?

ஆம். காரணம் இலங்கையில் குழந்தைகளுக்குரிய சுதந்திரத்திற்கான தெரிவு மிகக் குறைந்தளவே காணப்படுகின்றது. வாய்ப்புகளும் குறைந்தளவுதான். தமிழ் குழந்தைகள் இங்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை நன்கு காண்கின்றார்கள். அத்துடன் அவர்களும் அதை சுவிஸ்காரர்கள்போல் அனுபவிக்க ஆசைப்படுகின்றார்கள். சுவற்சிலாந்தில் தமிழ் பெற்றோர் தமது குழந்தைகள் சமூகநிலையில் உயரச் செல்லவேண்டும் என எதிர்பார்பதுடன் அதன்மூலம் தாமும் அந்த அந்தஸ்தை அடைந்துவிடலாம் என கருதுகின்றனர்.

எவ்வாறு தமிழ் பெற்றோருக்கு உதவ முடியும்? விசேட ஆலோசனைகள் தேவைப்படுமா?

நான் நம்பவில்லை. ஆனால் பெற்றோர் ஆலோசகர்களிடமிருந்து பெறும் ஆலோசனைகளை நாளாந்த வாழ்வில் கடைப்பிடிக்கின்றார்களா என்பது உறுதிசெய்யப்படவேண்டும். அது நடைபெறுவதில்லை. எனவே இது தொடர்பான கண்காணிப்பு வேண்டும்.

தமிழ் இளைஞர்களுக்கு கடினமான தண்டனை வழங்குமாறு நிர்வாகத்தை கேட்கின்றீர்கள்.நீண்ட நாள் தண்டனை வழங்கவேண்டுமென்றா கூறுகின்றீர்கள்?

அது குறைந்தளவு பலனையே கொடுக்கும். அவர்கள் ஜெயிலிலிருந்து மீண்டுவந்து முன்னர் செய்ததையே செய்வார்கள். ஆகவே கடினமான தண்டனைக்கு பதிலாக வேலைகளில் இணைவதற்கு உதவியும், உளவியல் ரீதியான மருத்துவமும் அவசியம்.
இந்த இளைஞர்களில் பலர் இலங்கை யுத்தத்தில் நேரடியாக அனுபவப்பட்டிருக்கிறார்கள். ஏனையோர் யுத்தத்தின் காட்சிகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்கள். இவர்கள் புலிகளின் நிகழ்வுகள் பலவற்றில் கலந்து கொண்டுள்ளதுடன் புலிகளுக்கான வெற்றி கைக்கெட்டிய தூரத்தில் என கூறப்பட்டுள்ளார்கள். ஆனால் புலிகள் தற்போது தோல்வியடைந்துள்ளமையால் இவர்கள் பாரிய விரக்கியடைந்துள்ளார்கள். இதிலிருந்து மீள்வது மிக இலகுவானதல்ல.

குறிப்பு : மேற்படி நேர்காணலை வழங்கியுள்ள ராஜன் ராஜ்குமார் 1983 ம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையில் போராட்டக்குழுக்களுடன் இணைந்து செயற்பட்டவர் எனவும் 1983 ஆண்டு சுவிற்சர்லாந்திற்கு இடம்பெயர்ந்தார் எனவும் Tagesanzeiger தெரிவிக்கின்றது.

3 comments :

Anonymous ,  September 3, 2011 at 12:50 PM  

We do agree with Mr. Rajkumar.There is a vast difference between the parents and the present generation.It's being described as "Generation Gap" parents thinking power or style of thinking are based on conservative,traditional & customary policies.Children look their future in a different way accordingly to the
european way of life.Very rare parents desires tallies with their children.

ajeevan September 3, 2011 at 2:57 PM  

சுவிசில் உள்ள தமிழர்களுக்கு , சுவிசின் அரசு, மொழி கற்கும் உரிமையை அன்றைய காலத்தில் வழங்கவில்லை.

அகதியாக வந்தவர்கள் மந்தைகள் போல வாழ வேண்டும் எனும் நோக்கிலேயே நிர்வாகம் ஆரம்பம் தொட்டே செயல்பட்டு வருகிறது.

உதாரணமாக அகதியாக வந்தோரில் பிரஞ்சு மொழி தெரிந்தோரை ஜெர்மன் அல்லது இத்தாலி மொழி பேசும் பகுதிகளுக்கு அனுப்புவார்கள்.
இத்தாலி தெரிந்தோரை ஜெர்மன் அல்லது பிரெஞ்சு தெரிந்த பகுதிகளுக்கு அனுப்புவார்கள்.
ஆங்கிலம் தெரிந்தோரை அந்த மொழி பாவனையல்லாத பகுதிகளுக்கு அனுப்புவார்கள்.
இவை அனைத்தும் ஒரு திட்டமிட்ட செயலாகவே பார்க்க முடிகிறது.

ஏனைய ஐரோப்பிய நாடுகளில் அந்நாட்டு மொழியை கட்டாயமாக கற்க வேண்டும் எனும் நியதி உண்டு.
அது சுவிசில் இருக்கவில்லை.
தற்போது சற்று மாறியுள்ளது.

அகதிகளாக இங்கு வந்தோர் கழுவல் - துடைத்தல் - தோட்ட வேலைகள் - பாதை திருத்தல் வேலைகளைத் தவிர மேன்மையாக கிடைத்த வேலை வைத்தியசாலை சமையல் உதவி வேலைகள் மட்டுமேயாகும். இந்த வேலைகளை தவிர வேறு எந்தவொரு வேலைக்கும் அனுமதியளிக்கப்படவில்லை. அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால் அது ஒரு பெரும் அதிசயமேயாகும்.

அதிலும் ஒன்று சுவிசின் ஒரு பெண்ணை மணமுடித்து அல்லது ஒரு வெள்ளையின பெண்ணோடு ஒன்றாக வாழும் பாக்கியம் கிடைத்து சுகபோகத்தையும் , மொழி அறிவையும் பெற்றுக் கொண்டதாகவே பார்க்க முடிகிறது.

தமிழர் கலாச்சாரம் குறித்து கரிசனை பெற்ற எவரும் இதை செய்தவர்களில்லை.
எனவே பெரும்பாலன தமிழர்களது சுவிசின் பொது அறிவானது அரைகுறை டொல்மேச்சர்களான மொழிபெயர்ப்பாளர்கள் சொல்லும் அவியல்தான்.

இது பெரும்பாலான தமிழர்களை தவறிழைக்க வைத்தது.
அதுவே தொட்டில் பழக்கம் சுடுகாடு என்பது போல தொடர்கிறது.

இப்படியான மொழி பெயர்ப்பாளர்களை நம்பி தண்டனை பெற்றோர் அதிகம். அவற்றை அநேக தமிழர்கள் கெளரவ குறைவாகிவிடும் என வெளியே சொல்வதில்லை. சுவிசில் உள்ள பெரும்பாலான மொழி பெயர்ப்பாளர்கள் என்பதை விட அனைவரும் மொழி பெயர்ப்பாளராக தேர்வு ஒன்று எழுதி மொழி பெயர்ப்பாளரானவர்களல்ல. சம்பந்தப்படுத்தப்பட்டவனை விட மொழி பெயர்ப்பாளர்கள் சொல்வதையே சுவிசின் அதிகாரிகள் நம்புகின்றனர். இது பெரும் தீங்கான விடயமாக என்னால் சொல்ல முடியும். இங்கே மொழி பெயர்ப்பாளர்கள் சார்பு நிலை கொண்டவர்களாகவே நடந்து கொள்கிறார்கள். சம்பந்தப்பட்டவர் சொல்வதை திரித்து சொல்லும் நிலை அதிக இடங்களில் காண முடிகிறது.

போலீசாரின் விசாரணைகளுக்கு சென்றவர்கள் ஒரு மொழி பெயர்பாளரிடம் சொன்னதை , இன்னொரு மொழி பெயர்ப்பாளர் மீண்டும் சொல்லும் போது , அப்படி தான் சொல்லவில்லை என சொல்லப் போய் , அந்த மனிதன் பொய்யானவன் என ஆக்கப்படுகிறான்.
அது மொழி பெயர்ப்பாளரது தவறாக கருத அந்த மொழி பெயர்ப்பாளரும் சொல்லாமல் ஆக்கிவிடும் அவலத்தால், ஒரு அப்பாவி பாதிப்புக்கு உள்ளாகிறான். இது 100 சதவீத உண்மையாக நடக்கிறது.

அதைவிட மோசமானது இந்த மொழி பெயர்ப்பாளர்களில் பலர் , ஏதோ போலீசார் போல நடந்து கொள்கிறார்கள். அதை அப்பாவிகள் நம்புகிறார்கள். வக்கீலிடம் அழைத்து செல்லும் மொழி பெயர்ப்பாளரை தமிழ் அகதிகள், லோயர் என்றே அழைக்கின்றனர்.

இதைவிட கொடுமையானது தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு மறைமுகமாக சில டொல்மேச்சர்களால் பாவிக்கபட்டுள்ளனர் என்பதேயாகும். அந்த பெண்களும் , இவர்கள் தமக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடுவரோ என அஞ்சி தம்மை அர்ப்பணித்து விடுகின்றர். இவை தமிழர் கெளரவ நோக்கமாக அனைவரும் மறைத்து விடுகின்றனர். (இவை குடும்ப மற்றும் மருத்துவ பிரச்சனை காரணமாக செல்வோருக்கு அதிகமாக நடக்கிறது.)

இப்படியான தவறான நிலைமைகள் தமிழர்கள் தவறிழைக்கவும் , தம் குழந்தைகளை தவறாக வழி காட்டவும் காரணமாகியுள்ளன.

இதிலும் தமிழ் பள்ளிகளும் , அமைப்புகளும் கவர்ச்சியான தன்மையோடு அதை நிர்வகிப்போரது புகழ் காரணமாக நடந்தப்படுகிறதே தவிர , பெரும்பாலானவற்றின் நடத்துனர்கள் குழந்தைகள் குறித்து எந்த அறிவும் அற்றவர்கள். தமது சுயநலத்துக்கான செயல்பாடுகளுக்காகவே நடத்தப்படுகின்றன. இவர்களது செயல்பாடுகள் பெரும்பாலும் அரசியல் - பயங்கரவாத - பணம் பண்ணும் ஊக்குவிப்பாகவேயன்றி பொது நல தொண்டாக இல்லவே இல்லை.

இதுபோன்ற காரணிகளை விட , மனோதத்துவ காரணிகளும் அடங்குகின்றன.

பெரும்பாலும் தமிழ் இளையோர் , இப்படியான பெற்றோரால் அடக்கி ஆள முற்படும் போது , அவை அவர்களை பாதிக்க வைக்கிறது . தமிழ் குழந்தைகள் இரு கலாச்சார அடிபாட்டுக்குள் சிக்கி மத்தளம் போல அடிபடுவதால் வெறுப்புடனேயே தம் பிஞ்சு வாழ்வை ஆரம்பிக்கின்றனர். இதுவே சோகமான உண்மையாகும்.

ajeevan ,  September 12, 2011 at 12:58 PM  

இலங்கை நெட்டில் ராஜன் ராஜ்குமார் என்பவர் எழுதிய ஆக்கத்துக்கு கீழே எனது பின்னோட்டம் ஒன்றை விடுத்திருந்த நிலையில், கடந்த 2011 செப்டம்பர் 10ம் திகதி (20.17hrs), மொழி பெயர்ப்பாளர்களுக்கு எதிராக கருத்துகளை எப்படி எழுதுவீர் எனும் விதத்தில் ராஜன் தொலைபேசியில் பேசத் தொடங்கியதுடன் , அவரோடு இருந்த மேனகா என தன்னை அறிமுகம் செய்து கொண்ட பெண் ஒருவரும் , மொழி பெயர்ப்பாளர்களுக்கு எதிராக எழுதியது தவறு எனும் தோரணையில் விவாதம் செய்யத் தொடங்கினார். அத்தோடு இப்படியான குப்பைகளில் கருத்துகளை எழுதுவதை விட சிறுகதைகளை எழுதுமாறு வேறு அறிவுரை சொன்னார்.

ஊடகங்களில் அநாமதேய பெயர்களில் எழுதினால் இவர்களால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் நேர்மையாக மட்டுமல்ல உண்மையான முகத்துடன் எழுதும் போது ஏதோ தொலைபேசி வழி மிரட்டும் தொனியில் பேசுவதை தம் வழக்கமாக கொண்டவர்கள் அதையே என்னிடமும் காட்ட முனைந்திருக்கிறார்கள் என நினைக்கிறேன்.

எனவே நான் ஏற்கனவே எழுதிய பின்னோட்டத்தில் //இந்த மொழி பெயர்ப்பாளர்களில் பலர் , ஏதோ போலீசார் போல நடந்து கொள்கிறார்கள்.// என எழுதியதை சரி என ஒப்புவிப்பதாகவே அவர்களது தொலைபேசி உரையாடலை கருதுகிறேன்.

ஊடக சுதந்திரம் தடுக்கப்பட்டுள்ள இடங்களில் இன்றும் பலர் தமக்கு சரி எனப்படும் எண்ணப் பகிர்வுகளை எழுதி வந்துள்ளனர் / வருகின்றனர்.
அதை பெரும்பாலும் யாராலும் தடை செய்யவோ அல்லது மிரட்டி அடிபணிய வைத்து நடுங்க வைக்கவோ முடியாது.
இதுபோன்ற தொலைபேசி மிரட்டல்களையும் , துப்பாக்கிகளையும் கண்டு சிலர் நடு நடுங்கலாம். எல்லோரரும் அப்படி இருக்க மாட்டார்கள்!


மக்கள் தமது கருத்தை சொல்ல அனுமதியுள்ள சுவிற்சர்லாந்து போன்ற நாடுகளில் தவறுகளை விமர்சிக்கும் அங்கிகாரம் எவருக்கும் உண்டு.
எனவே எனது பின்னோட்டத்தின் தவறுகளை அல்லது மாற்றுக் கருத்துகளை எழுத்தில் இங்கே, முன்வைக்க வேண்டுகிறேன்.
தயவு செய்து தொலைபேசி மிரட்டல்கள் போன்ற அநாகரீக நடவடிக்கைகள் தேவையற்றது என்பதையும் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது 30 வருடங்களுக்கும் மேலான ஊடக வாழ்வில், எனது கருத்துகளை / செய்திகளை இலங்கை - சிங்கை மற்றும் சுவிசிலும் சர்வதேச ஊடகங்களிலும் கொண்டு வந்த போதும், அதற்கான தமது எதிர் கருத்துகளை பலர் எழுதி வந்துள்ளனர் /எழுதி வருகின்றனர்.
இவை நாகரீகமான ஒரு விடயம். எனக்குள்ள அதே உரிமை அவர்களுக்கு உண்டு. அப்படியில்லாதவிடத்து இவர்கள் சர்வாதிகார போக்கை கடைப்பிடிப்பதாகவே சொல்லத் தோன்றுகிறது.

நான் எழுதிய பின்னோட்டத்தில் உள்ள தவறுகளை யாரும் சுட்டிக் காட்ட முடியும். அதை பிரசுரிக்கும் கடமை சம்பந்தப்பட்ட இணையதளத்துக்கு உண்டு.
அதனால், அதற்கான ஒரு ஆரோக்கியமான விவாதத்தில் என்னாலும் ஏனையவர்களாலும் ஈடுபட முடியும்.
இல்லாமல் தவறும் பட்சத்தில் சட்டத்தின் உதவியை அவர்கள் தாராளமாக நாடலாம். எது சரி, எது தவறு என்பதை அனைவரும் உணரும் ஒரு மேடை அங்கே கிடைக்கும்.

இப்போது என் மனதில் மேலோட்டமாக எழுந்த சில கேள்விகள்:-

Tagesanzeiger போன்ற பத்திரிகைகளில், புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் குறித்து கருத்து எழுதும் உரிமை மட்டும் எப்படி தங்களைப் போன்றவர்களுக்கு வந்தது?

இது குறித்து ஒரு திறந்த அரங்கில் பேச வர சம்மதமா?

சம்மதம் என்றால் சுவிசின் ஊடகங்களையும் அழைத்து இது குறித்து பகிரங்க விவாதம் ஒன்றை ஏற்பாடு செய்ய முடியும்.
அவை சுவிசின் அரச ஊடகங்களில் இடம் பெறும். அது நிச்சயம் அனைவரது விம்பங்களையும் பகிரங்கப்படுத்தும்.

தொடர்ந்தும் பேசுவோம்........

உண்மையுடன்
அஜீவன்
info@ajeevan.com
--
AJeevan
- Raise our voice for unity
http://www.ajeevan.com
http://www.radio.ajeevan.com
http://www.kanalk.ch
http://www.chreisgleis.tv

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com