மேல்மாகாணத்தில் உள்ள சட்டவிரோத ஆயுர்வேத மசாஜ் நிலையங்களில் விபசாரம்
மேல்மாகாணத்தில் உள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையங்கள் பல அனுமதிப்ப த்திரமின்றி இயங்கி வருவதாகவும் சில நிலையங்களில் ஆயுர்வேத சிகிச்சை என்ற பெயரில் விபசாரம் இடம் பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நல்ல முறையில் நடத்தப்பட்டு வரும் ஆயுர்வேத மசாஜ் நிலையங்கள் ஆயுர்வேத திணைக்களத்தில் பதிவு செய்திருப்பதுடன் வியாபார பதிவுச் சான்றிதழையும் வைத்திருக்கும்.
மசாஜ் நிலையங்கள் மீது சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்படுவது தொடர்ந்து இடம்பெறும் என்று மேல்மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தெரிவித்தார். ஆயுர்வேத சிகிச்சை நிலையங்கள் என்ற பெயரில் விபசாரத்தை வியாபாரமாக நடத்தி வந்த நார்கள் மற்றும் அங்கு இருந்த பெண்கள் பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த சிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார்.
காளான்கள் முளைப்பது போல் திடீரென்று தோன்றும் இது போன்ற ஆயுர்வேத மசாஜ் நிலையங்களில்; உரிய வசதிகள் இல்லாதிருப்பதுடன் தகுதியற்ற ஆயுர்வேத வைத்தியர்களும் இங்கு பணியாற்றுவதாக தெரிய வந்துள்ளது.
பொலிஸ் நிலையங்களில் உள்ள இரகசிய பொலிஸார் ஊடாக இது போன்ற ஆயுர்வேத நிலையங்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
0 comments :
Post a Comment