பெண்கள் போருக்குச் செல்ல ஆஸ்திரேலியா அனுமதி
போர் முனைக்குச் செல்வது உள்ளிட்ட இராணுவத்தின் அனைத்து மட்டங்களில் உள்ள வேலைகளிலும் பெண்களைப் பணியாற்ற அனுமதிப்பதென ஆஸ்திரேலியா முடிவெடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் இராணுவத்தில் 59 ஆயிரம் பேர் பணியில் இருக்கின்றனர். இதில் 1500 பேர் ஆப்கானில் தற்போது பணிபுரிந்து வருகின்றனர். தற்போதைய நிலையில் இராணுவப் பணிகளில் பீரங்கிகளை இயக்குவது உள்ளிட்ட 93 சதவீதப் பணிகளில் பெண்கள் பங்கு பெற வழிசெய்யப்பட்டுள்ளது.
இப்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக மீதமுள்ள 7 சதவீதப் பணிகளிலும் பெண்களுக்கு இருந்த தடை விலக்கப்பட்டுள்ளது. ஆண்களைப் போலவே போர்களத்துக்கு செல்ல பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள். சிறப்பு படைப் பிரிவுகளில் சேர்வதற்கான தகுதிகளை பெண்கள் பெற்றிருந்தால் அவர்கள் அதில் சேரலாம்.
அனைவரும் சமம் என்ற கருத்து ஆஸ்திரேலியாவில் வலிமையாக இருக்கும் நிலையில் இந்த முடிவு அந்த கருத்தாக்கத்தின் இயல்பான நீட்சிதான் என்று அரசாங்கம் கூறுகிறது. இதுவரை இஸ்ரேல், கனடா மற்றும் நீயுசிலாந்து ஆகிய நாடுகள் தான் பெண்களை போர்முனைக்கு செல்லும் பணிகளில் சேர்க்கின்றன என்று கருதப்படுகிறது.
அவுஸ்திரேலிய பெண் இராணுவ வீராங்கணை நன்றி பிபிசி.
0 comments :
Post a Comment