நெதர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ள புலிகளுக்கு அதிக பட்ச தண்டனை வழங்க கோரிக்கை.
புலிகளுக்காக நெதர்லாந்து வாழ் தமிழ் மக்களிடம் மிரட்டிப் பணம் பறித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளோருக்கு அதிக பட்ச தண்டனையை வழங்குமாறு அரச தரப்பு சட்டத்தரணி மன்றில் கோரிக்கை விடுத்துள்ளார், கைது செய்யப்பட்டுள்ள ஐவரும் மேற்கொண்ட பாரிய குற்றச் செயல்களுக்காக 10 தொடக்கம் 16 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என நெதர்லாந்து அரச தரப்பு சட்டத்தரணி கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐவரும், நெதர்லாந்து நாட்டில் குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழர்களிடத்திலும் சட்டவிரோத சீட்டிழுப்புகள் மூலமும் பணமோசடி செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை யுத்த நிறைவின் பின்னரும்கூட குறித்த ஐவரும் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர் என சுட்டிக்காட்டிய அரச தரப்பு சட்டத்தரணி, அவர்கள் பணச்சேகரிப்பின் போது அது தற்கொலைத் தாக்குதல்களுக்காக பெறப்படுவதாக தெரிவித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் சந்தேக நபர்களுக்கு நீண்டகால சிறைத் தண்டனை வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment