வியட்நாம் - இலங்கை இடையில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு ஒத்துழைப்பு
உயர்மட்ட பிரதிநிதிகள் கைமாற்றம், மொழிப் பயிற்றுவிப்பு, இராணுவ கட்டமைப்பு அனுபவ பகிர்வு மற்றும் கண்ணிவெடி மற்றும் குண்டு அகற்றல் போன்ற பாதுகாப்பு தரப்பிலான ஒத்துழைப்பினை வியட்நாம் பாதுகாப்பு அமைச்சும் இலங்கையும் பலப்படுத்தவுள்ளன.
இது தொடர்பிலான ஒப்பந்தம் இலங்கைப் பாதுகாப்பு செயலாளருக்கும் வியட்நாம் பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் நேற்றைய தினம் வியட்நாமில் கைச்சாத்தாகியுள்ளது.
இதன்போது நட்புறவிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, இராணுவ உதவிகள் என்பது தொடர்பிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கையின் ஆதரவுக்கு வியட்நாம் பிரதி பாதுகாப்பு அமைச்சர் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment