அமெரிக்கத் தூதுவர் வன்னி சென்று மக்களை சந்தித்தார்.
வன்னியின் இன்றைய நிலவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா பியுட்டனிஸ் இன்று திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விசேட கெலிகொப்டரில் அங்கு சென்ற அவர் முதலில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரை சந்தித்து விபரங்களை அறிந்து கொண்டதுடன் பிரதேசத்திலுள்ள சில கிராமங்களுக்கு சென்று மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுடன் பேசினார்.
பின்னர் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் மதிய போசனத்தை எடுத்துக்கொண்டதுடன் பிரதேச அரசியல்வாதிகள் சிலரையும் சந்தித்து பேசியதாக அறிய முடிகின்றது.
0 comments :
Post a Comment