மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகம் தொழிலாளர் சங்கத்திடம்.
பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தை கட்சியின் சோஷலிஸ தொழிலாளர் சங்கம் கைப்பற்றியுள்ளதாக தெரிய வருகிறது. கட்சியின் பெரும்பான்மையானவர்கள் குமார அணியினரை பிரதிநிதித்துவம் செய்வதால் ரில்வின் அணியினர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
கட்சியின் தலைமையகத்தில் இதற்கு முன்னர் வேலை செய்த உறுப்பினர்கள் லால்காந்த அணியினரினரால் அவசியமில்லாதவர்களாக கேலி செய்யப்பட்டு வந்துள்ளனர்.
தலைமையகத்தின் பாதுகாப்பிற்காக கொழும்பு மாவட்டத்திலிருந்து விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியினரால் நடத்தப்பட்டு வந்த லங்கா பத்திரிகை குமார அணியினரால் முழுமையாக கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதனை புபுது ஜயகொட கொண்டு நடத்துவதாகவும் தெரிய வருகிறது.
0 comments :
Post a Comment