அநுராதபுரம் முஸ்லிம் ஸியாரம் உடைக்க உத்தரவிட்ட அதிகாரிக்கு இடமாற்றம்.
அநுராதபுரம், குருணாகல் சந்தியில் அமைந்திருந்த (ஒட்டுப் பள்ளம்) மிகப் பழமைவாய்ந்த முஸ்லிம் ஸியாரம் சிங்களவர்கள் மற்றும் பெளத்த மதகுருமாரால் முற்றாகத் தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பெளத்த சாசன மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர்களில் ஒருவரான எம்.எஸ்.கப்புகொட்டுவ உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அரச நிர்வாக அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட ஸியாரத்தை அங்கிருந்து அகற்றுமாறு இவரே உத்தரவிட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த இடமாற்றத்துக்கான உத்தரவு பெளத்த சாசன மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சின் செயலாளர் கெசியன் ஹேரத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் ஸியாரத்தை அகற்ற உத்தரவு பிறப்பித்தமைக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கெசியன் ஹேரத் எம்.எஸ்.கப்புகொட்டுவுக்கு அறிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment