Thursday, September 29, 2011

சோதிடனின் பேச்சைக் கேட்டு நிர்வாணமாக கோவிலுக்குச் சென்ற பெண்!

பல்லாவரத்தில் காதலனை வசியம் செய்ய நள்ளிரவில் சாலையில் நிர்வாணமாக நடந்து சென்று கோவிலில் பூஜை நடத்த முயன்ற பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை சேர்ந்த 25 வயதான அந்தப் பெண், பிளஸ்-2 வரை படித்துள்ளார். இவர் செய்யாறு பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் காதல் ஜோடிகளாக சுற்றித்திரிந்த பிறகு ராமச்சந்திரன் அந்தப் பெண்ணை விட்டு விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இதில் ஆவேசமடைந்த அந்தப் பெண் எப்படியாவது காதலனை அடைந்தே தீருவது என சபதம் எடுத்தார். இதற்காக அப்பகுதியில் உள்ள சோதிடனைச் சந்தித்து, ``காதலனை எப்படியாவது வசியம் செய்து அவரை நான் அடைய வேண்டும். அவரையே திருமணம் செய்ய எனக்கு ஏதாவது வழி இருந்தால் கூறுங்கள்'' என்று கேட்டார்.

உடனே சோதிடன், ``முழு அமாவாசை இரவில் நிர்வாணமாக சென்று 3 கோவில்கள் முதல் 9 கோவில்கள் வரை சென்று பூஜை செய்து வழிபட்டால் அதன் பின்னர் உன் காதலன் உன் காலடியே சரணம் என்று கிடப்பான்'' என்றார்.

சோதிடன் சொன்னதை கேட்ட அந்தப் பெண் நிர்வாண பூஜையை சொந்த ஊரில் செய்தால் விஷயம் வெளியில் தெரிந்து விடும்; வெளிïரில் போய் பூஜை செய்யலாம் என்று முடிவெடுத்தார்.

சென்னை பொழிச்சலூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்த அந்தப் பெண் அமாவாசை இரவு என்பதால் இரவில் குளித்து விட்டு அருகில் உள்ள கடையில் போன் பேசி விட்டு வருவதாக கூறி வீட்டில் இருந்து வெளியில் சென்றார்.

நள்ளிரவு 12 மணிக்கு பம்மல் கிருஷ்ணாநகர் அருகில் ஆடைகளை களைந்து நிர்வாணமானார். பின்னர் முகத்தை தலைமுடியால் மூடியவாறு சாலையில் நடக்கத் தொடங்கியுள்ளார்.

சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாததால் யாரும் இதை கவனிக்கவில்லை. பம்மல் கிருஷ்ணாநகரில் மூடியிருந்த கோவில் முன்பு நிர்வாணமாக வழிபட்டு விட்டு அதே சாலையில் பல்லாவரம் நோக்கி நடக்க ஆரம்பித்தார். அந்த சாலையில் உள்ள புத்துக்கோவிலில் அதே பாணியில் வெளியில் இருந்து வழிபாடு செய்து விட்டு பல்லாவரம் பெரிய பாளையத்தம்மன் கோவிலுக்கு செல்ல பல்லாவரம் ஆடுதொட்டி அருகில் ரோட்டில் நிர்வாணமாக சென்றார்.

நள்ளிரவில் பல்லாவரம் குற்றப்பிரிவு காவலர்கள் ரோந்து சென்று கொண்டிருந்த போது ரோட்டில் ஒரு பெண் நிர்வாணமாக செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே பல்லாவரம் காவல் நிலையத்தில் இருந்த பெண் காவலருக்கு தகவலைக் கூறி சேலையுடன் சம்பவ இடத்திற்கு வரும்படி தெரிவித்தனர்.

மாற்றுக்கு வைத்திருந்த சேலையை எடுத்துக்கொண்டு பல்லாவரம் ஆடு தொட்டி அருகில் பெண் காவலர்கள் வந்தனர். காவலர்களைக் கண்டதும் ஓடத்தொடங்கிய அந்தப் பெண்ணை அவர்கள் விரட்டிச்சென்று பிடித்து சேலையை போர்த்தி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அங்கு பெண் காவலர்கள் விசாரணை நடத்தியதில் காதலனை வசியம் செய்ய சோதிடன் சொன்ன யோசனையில் நிர்வாண பூஜை நடத்த முயன்ற தகவலை சொல்லி தன்னை காதலனிடம் சேர்த்து வைக்குமாறு கூறினார்.

இரவில் பரங்கிமலை மகளிர் காவல் நிலையத்தில் அந்தப் பெண்ணை தங்க வைத்த காவல்துறையினர் நேற்று காலை பல்லாவரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com