சிற்றூழியப் பெண் மீது பாலியல் வல்லுறவு
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிற்றூழியர் பிரிவில் மேற்பார்வையாளராகப் பணியாற்றும் பெண்னொருவர் அந்த வைத்தியசாவையின் ஊழியர் ஒருவரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையின் ஓய்வறையில் இருக்கும் போது அந்த அறையினுள் நுழைந்த சந்தேக நபரான ஊழியர் அப்பெண்ணை பலாத்காரம் புரிந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேநேரம் மட்டடக்களப்பு வாழைச்சேனைப் பகுதியில் பதினான்கு வயதுச் சிறுமி ஒருத்தியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதுடன் மட்டுமல்லாது அவரைக் கர்ப்பமாக்கிய 64 வயது கிழட்டுக்கு வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றம் இன்று விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வாழைச்சேனையைச் சேர்ந்த இந்த நபரைக் கைது செய்த பொலிஸார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமி வயிற்று வலி காரணமாக அவதியுற்றதனையடுத்து அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று பரிசோதித்த போதே அவர் ஐந்தரை மாதக் கர்ப்பிணி என்பது தெரிய வந்தது. இதனையடுத்து குறிப்பிட்ட சிறுமியிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது தனக்கு நேர்ந்த அவலத்தை அவர் விபரித்துள்ளார். தற்போது இந்தச் சிறுமி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு பொதுநல இல்லத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். குறிப்பிட்ட சிறுமியுடன் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட நபரை நேற்று மாலை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
0 comments :
Post a Comment