ஜெனீவாவில் உள்ள மனித உரிமை கவுன்ஸிலின் முன்பாக ஆர்ப்பாட்டம்
ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்ஸிலின் முன்பாக இந்த மாதம் 13 ஆம் திகதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர் என்று 'பயங்கரவாத ஒழிப்பு இலங்கையர் ஒன்றியம்' என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்ஸிலில் நடைபெறும் அமர்வில் இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் கடைசி சிலநாட்களின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் தொடர்பாக மேலைத்தேய நாடுகள் இலங்கைக்கு எதிராக கொண்டுவரவுள்ள பிரேரணைக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் இடம் பெறவுள்ளது.
இத்தாலி, ஜேர்மன்,பிரான்ஸ், இங்கிலாந்து, சுவிர்சற்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த பெரும் எண்ணிக்கையான இலங்கையர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவள்ளதாக பயங்கரவாத ஒழிப்பு இலங்கையர் ஒன்றியம் தெரிவித்தது.
1 comments :
Counter demonstrations are needed to
bring the truth to the outer world.Amid all the claims counter claims are really important.
Post a Comment