சீமான் உட்பட 600 பேர் கைது
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி நடைபயணம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்பட 600 பேர் கைது செய்யப்பட்டனர். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாற்றப்பட்டுள்ள 3 பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரியும், இது தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தலைமையில் ஆயிரம் பேர் இன்று வேலூரில் இருந்து சென்னைக்கு நடைபயணம் மேற்கொண்டனர்.
வேலூரில் இருந்து ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றதும் நடைபயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி சீமான் உள்பட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 600 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments :
Post a Comment