புலிகளை ஒழித்த ஜனாதிபதி சிங்கம் போல் நியூயோர்க் சென்றார். நிமால் சிறிபால டி சில்வா
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு "சிங்கம்.' இலங்கையின் அரச தலைவர்களுக்கு மிகவும் அச்சுறுத்தலான நாடாகக் கருதப்பட்ட அமெரிக்காவில் வீரதீரமாகவும் உயர் இராஜதந்திர அணுகுமுறையுடனும் செயற்பட்டு பராக் ஒபாமா உட்பட ஏனைய நாடுகளின் அரச தலைவர்களை அவர் வெற்றிக் கொண்டு விட்டார் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார். மத்திய கிழக்கு நாடுகளின் முழு ஆதரவும் இலங்கைக்கே உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி உரையாற்றிய சர்வதேசத்தின் சவால்களுக்கும் இலங்கைக்கு எதிரான போலி குற்றச் சாட்டுகளுக்கும் பதிலளித்துள்ளார். இதற்காக நாட்டு மக்கள் அனைவரும் ஜனாதிபதிக்கு நன்றி கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் கூறுகையில்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த சில தினங்கள் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்திற்கு சென்றிருந்தார். இங்கு செல்வது இலங்கையின் அரசியல் தலைவர்களுக்கு உகந்த விடயமல்ல என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு சிங்கத்தைப் போன்று ஐ. நா. தலைமையகத்திலும் அமெரிக்காவிலும் பிரகாசித்திருந்தார்.
அனைத்து சவால்களுக்கும் இராஜதந்திர ரீதியில் பதிலளித்து நாட்டின் நற்பெயரை பாதுகாத்தார். சர்வதேச நாடுகளில் வாழும் இடம்பெயர்ந்த தமிழர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் போலிக் குற்றச்சாட்டுகளுக்கும் அவர்கள் இடத்திலேயே வைத்து பதிலடிக் கொடுத்தார் என்றார்.
0 comments :
Post a Comment