நடிகைகளுக்கு எதிராக ஆண்கள் பாதுகாப்பு சங்கம்!
"பொய் புகார்கள் கொடுத்து பணம் சம்பாதிக்க முயற்சிக்கும் நடிகைகளின் வீடுகளின் முன்பு, தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்" என்று அதன் தலைவர் வழக்கறிஞர் டி.அருள்துமிலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளார்.
’’தமிழ்நாட்டில் பல்வேறு நடிகைகள், நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பொய்யான புகார்களை கொடுத்து அதன்மூலம், பின்னர் மிரட்டி பணம் பறிக்கும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் நடிகைகள், தன் சுய விளம்பரத்தை தேடிக்கொள்வதுடன், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கவும் முயற்சிக்கிறார்கள்.
இவர்கள் நீதிமன்றங்களுக்கு சென்று எதிராளிக்கு தண்டனை பெற்றுத்தர முயல்வதே கிடையாது. இரு தரகர்களை வைத்து பேசி பணம் பறிக்கும் செயலில்தான் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற செயலை தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நடிகைகள் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கை எடுக்க முதல்வர் ஜெயலலிதா, தனிப்பிரிவைஏற்படுத்தி கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment