Monday, September 12, 2011

றொபேர்ட் பிளேக் யாழ் முதல்வரையும் திருமதி மகேஸ்வரனையும் சந்திப்பாரா?

இன்றுகாலை இலங்கை வந்தடைந்த தென் கிழக்காசிய நாடுகளுக்கான அமெரிக்க ராஜங்க திணைக்களத்தின் பிரதிச் செயலாளர் றொபேர்ட் பிளேக் இன்று காலை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்துவிட்டு மறுகணமே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்திருந்தான செய்திகள் வெளியாகியிருந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் மிகவும் ஆரோக்கியமான சந்திப்பு என தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் இவர் நாளை யாழ்பாணம் செல்வதாக அறியமுடிகின்றது.

ஆனால் இவர் யாழில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏகப்பிரதிநிதி மோகத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் செயல்படுவாரா அல்லது யாழ் மக்களினால் பாராளுமன்றுக்கு அனுப்பப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் மற்றும் யாழ் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோரையும் சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

1 comments :

Anonymous ,  September 13, 2011 at 6:57 AM  

Times to time he makes inspection about the administration of Srilanka and makes the log entry for the reference of his masters.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com