2034ஆம் ஆண்டில் சுவிசில் உள்ள அனைத்து அணு மின் நிலைய உற்பத்தியும் நிறுத்தப்படும்.
ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி ஏற்பட்ட அணு உலை விபத்தால் ஜப்பான் பொருளாதாரம் பாதித்தது. இந்த விபத்து காரணமாக உலக நாடுகளிலும் அணு தொழில் துறையில் சிறிது பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என சுவிஸ் பெடரல் எரி சக்தி அலுவலகத்தில் சர்வதேச எரிசக்தி விவகார தலைவராக உள்ள ஜீன் கிறிஸ்டோபே தெரிவித்தார்.
கடந்த 6 மாதத்திற்கு முன்னர் ஜப்பான் புகுஷிமாவில் 9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி பாதிப்பு காரணமாக ஜப்பானின் முதன்மை அணு மின் நிலையம் நிலை குலைந்தது.
தலைநகர் டோக்யோவிற்கு 240 கிலோ மீற்றர் தொலைவில் இந்த இயற்கை பேரிடர் ஏற்பட்டது. இந்த அணு மின் நிலையத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஜப்பான் தற்போதும் போராடி கொண்டிருக்கிறது.
கடந்த மே மாதம் சுவிஸ் அரசு கூறுகையில் வருகிற 2034ஆம் ஆண்டில் சுவிசில் உள்ள அனைத்து அணு மின் நிலைய உற்பத்தியும் நிறுத்தப்பட்டு விடும் என தெரிவித்தது. தற்போது உள்ள அணு மின் நிலையங்களின் ஆயுட்காலம் நீட்டிக்கப்படாது என்றும் உறுதி அளித்தது.
இது குறித்து சுவிஸ் எரிசக்தி தலைவர் ஜீன் கிறிஸ்டோபே கூறுகையில் சுவிசும் ஜேர்மனியும் அணு மின்நிலைய உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளன. ஆனால் உலக அளவில் ஜப்பான் அணு மின் நிலைய விபத்து சிறிய தாக்கத்தையே ஏற்படுத்தி உள்ளது.
பல நாடுகளில் அணு மின் நிலையங்கள் தொடர்கின்றன. ஆனால் அதன் விரிவாக்கம் சற்று குறைந்து இருக்கிறது. அந்த நாடுகளில் அணு மின் உற்பத்தி பாதுகாப்பு ஆய்வு செய்யப்பட்டு அணு மின் உற்பத்தி தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார்.
0 comments :
Post a Comment