இந்தியாவிலுள்ள புலிகளுக்கு மாதாந்தம் 3000 ரூபாய். புலனாய்வுத்தகவல்.
இறுதி யுத்தத்தின் போது இலங்கையிலிருந்து தப்பியோடி இந்தியாவில் மறைந்துள்ள புலிப்பயங்கரவாதிகளுக்கு புலிகளின் புலனாய்வுப் பிரிவினரினூடாக மாதாந்தம் ஒருவருக்கு மூவாயிரம் ருபா வீதம் கொடுப்பனவாக வழங்ப்படுவதாக இலங்கை புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தென்னிந்தியாவில் மறைந்து வாழும் ஒ ருதொகை புலி உறுப்பினர்களுக்கு இவ்வாறு மாதாந்தம் கொடுப்பனவு வழங்கப்படுவது தெரிய வந்துள்ளாதாக புலனாய்வுதுறையினர் தெரிவிப்பதாக சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஐரோப்பாவில் மறைந்து வாழும் புலிகள் இயக்கத்தின் புலனாய்வு பிரிவின் முக்கியஸ்த்தர் ஒருவரூடாக வழங்கப்படும் இந்த கொடுப்பனவு தென்னிந்தியாவில் வாழும் புலிகளின் தலைவரின் மூலமாக அங்கு வாழும் புலி உறுப்பினர்களுக்கும் விநியோகிக்கப்படுகிறது என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் தேசத்திலே தொடர்ந்தும் மறைமுகமாக பணம்சேகரித்துவரும் புலிகள், இறுதி யுத்தத்தின்போது நாட்டிலிருந்து வெளியேறி ஆசிய நாடுகளில் தங்கியுள்ள புலிகளுக்காக இப்பணத்தினை செலவிடுவதாக தெரிவித்தபோதும் அவர்களுக்கு 3000 ரூபாவே வழங்குவது இத்தகவலூடாக உறுதியாகின்றது.
அத்துடன் இவ்வாறு பணத்தினை வழங்கும் புலம்பெயர் புலிகள் இந்நபர்களை வன்முறைக்கு தூண்டுவதாகவும் இவர்களின் அறிவுறுத்தலிலேயே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் அமைந்துள்ள பௌத்த மகா போதி மத்திய நிலையத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்நடவடிக்கைகள் நாட்டில் சமாதானத்தை சீர்குலைக்கும் எனவும் இந்த அச்சுறுத்தலை சமாளிக்க நடவடிக்கைகள் தேவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment