கள்ளக்காதலியின் 12 வயது மகளை வல்லுறவு கொண்ட காமுகனுக்கு பிணை
விவாகரத்து பெற்ற பெண்ணொருவருடன் கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு அந்தப் பெண்ணின் 12 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த நபரை, நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி 20 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும் தலா மூன்று இலட்சம் கொண்ட இரு நபர்களின் சரீரப்பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
கொட்டுக்கொட யககொடமுல்ல மிரிஸ்வத்த பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய திருமணமான நபர் ஒருவரே பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவராவார். 2009 ஜனவரி 15 முதல் 2010ஜனவரி 14 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மினுவாங்கொட, வேகொவ்வ பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரினால் 12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வந்துள்ளார் .
இதேநேரம் தான் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் என்று கூறி பாடசாலை மாணவி ஒருவரை அச்சுறுத்தி, அந்த மாணவியின் தேசிய அடையாள அட்டையை பலாத்காரமாக பெற்றுக்கொண்டு, அதனை பெற்றுக்கொள்ள ஜா-எல பிரதேசத்திற்கு வருமாறு வருமாறு மாணவியை அழைத்த போலி பொலிஸ் உத்தியோகத்தரை நீர்கொழும்பு பிரதான மஜிஸ்ட் ரேட் ஏ.என்.எம்.பி அமரசிங்க ஐயாயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும் இரண்டு இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
ராகமை பொடிகும்புர பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே பொலிஸ் உத்தியோகத்தராக நடித்து பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டவராவார்.
இந்த வழக்கின் முறைப்பாட்டாளர் சீதுவை, ரத்தொழுவை பிரதேசத்தை சேர்ந்த மாணவியாவார். 2011செப்டெம்பர் மாதம் 2ஆம்திகதி இந்த மாணவி பாடசாலை முடிவடைந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர், தான் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் என்று மாணவியிடம் குறிப்பிட்டு அந்த மாணவியின் தேசிய அடையாள அடடையை பலாத்காரமாக பெற்றுக்கொண்டுள்ளார். பின்னர் மீண்டும் மாணவியின் பின்னால் சென்ற சந்தேக நபர் அடையாள அட்டைதேவையென்றால் ஜாஎல-பிரதேசத்திற்கு வருமாறு மாணவியிடம் கூறியுள்ளார் என்று முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொட்ர்பாக சீதுவை பொலிஸ் நிலையத்தில் மாணவி முறைப்பாடு செய்துள்ளார் இதனைத்தொடர்ந்து சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment