மட்டு ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை குறித்து SLTR முகாமையாளர் கண்டனம்.
மட்டக்களப்பு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் கடந்த 19.08.2011 அன்று மர்ம மனிதர்கள் புகுந்துள்ளதாக கிடைத்த செய்தியின் நம்பகத் தன்மையை கண்டறியச் சென்ற சுயாதீன ஊடகவியலாளர் ரீ.எல். ஜவ்பர்கான் தாக்குதலுக்கு உள்ளானமையை தான் மிகவும் கண்டிப்பதாக இலங்கை தமிழோசை சர்வதேச வானொலியின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ. எம். ஜெஸீம் தெரிவித்துள்ளார்.
பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் பணியாற்றிவரும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் இவ்வாறான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் காரணமாக தமது ஊடகப் பணியை சிறப்பாக மேற்கொள்ள முடியாத நிலைக்கு மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் தள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஓரு பத்திரிகையாளர் எப்போதும் நடு நிலையாக நின்று செய்திகளைத் தொகுத்து மக்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் செய்திகளை திரித்து எழுதுவதால் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்க வழிவகுக்கும், சுயாதீன ஊடகவியலாளர் ஜவ்பர்கான் மீது ஒரு குறித்த குழுவினால் நடாத்தப்பட்ட தாக்குதல் இந்த நாட்டிலுள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் முன்னுதாரணமாகும் எனக்குறிப்பிட்டுள்ள அவர் ஊடகவியலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும், சவால்களுக்கும் முகங்கொடுக்க வேண்டியிருக்கிறது. நாம் பக்க சார்பின்றி செய்திகளை நம்பகத்தன்மையுடன் எழுதி வெளியிட்ட போதும் இவ்வாறான தாக்குதல்களுக்குள்ளாகும் ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்குவதோடு, ஊடகவியலாளர்களைத் தாக்கும் தீயசக்திகளை சட்டத்துக்கு முன் நிறுத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோளாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்.ஜீனைட்.எம்.பஹத்
0 comments :
Post a Comment