Sunday, August 28, 2011

இலங்கை இந்திய அரசுகள் மீண்டுமமொரு ஒப்பந்தம் செய்யும் நிலை உருவாகுமா ?

பேராசிரியர் ஜானக பெரேரா

தற்போதைய இலங்கை அரசு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன காலத்தில் இடம்பெற்ற துக்ககரமான தவறுகளை நோக்கி செல்வதாகவும் மீண்டும் இலங்கையும் இந்தியாவும் ஒப்பந்தம் ஒன்றை செய்யலாம் எனவும் அவுஸ்திரேலியா சிட்னி மெக்யுரி பல்கலைக்கழகத்தின் பயங்கரவாத தடுப்பு புலனாய்வு தொடர்பான பேராசிரியர் ஜானக பெரேரா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, இந்திய ஆதிக்கத்திலிருந்து வெளியேறி மாற்று வெளிநாட்டு கொள்கைகளையே ஜே.ஆர். கடைப்பிடித்தார். இந்தியா அணிசேரா நாடாக இருந்தாலும் ரஷ்யாவோடு நட்புறவு ஒப்பந்தம் மூலம் பிணைக்கப்பட்டிருந்தது. அமெரிக்க ஜனாதிபதி ரீகனும் ஜே.ஆர். ஜயவர்த்தனாவை அமெரிக்காவிற்கு அழைத்து கௌரவித்தார்.

இதன் பின்னர் திருமலையிலுள்ள எண்ணெய் குதங்கள் மற்றும் வொயிஸ்
ஒவ் அமெரிக்க ஒலிபரப்பு நிலையம் திறப்பது சம்பந்தமாகவும் அமெரிக்காவுடன் பேச்சு இடம் பெற்றது அயல் நாடுகளின் உள்விவகாரம்களில் தலையிடுவதில்லை. ஆனால் வெளிநாட்டவர் தலையிடுவதை சகிக்கவும் முடியாது என்ற இந்தியாவின் கோட்பாட்டு கொள்கையை ஜே.ஆர் சரியாக புரிந்து கொள்ளவில்லை.

1987 ம் ஆண்டு 6ம் மாதம் 4ம் திகதி இந்திய விமானப்படை விமானம்கள் உணவு பொட்டலம்களை இலங்கை வான் பரப்பு மீது போட்டபோது வடமாராட்சி இராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டதுடன் இலங்கைக்கு மேற்குலகத்துடன் ஒரு ஒப்பந்தமும் இல்லை என்ற உண்மை நிலையும் தெரியவந்தது. எந்தவொரு வல்லரசும், இந்தியாவுடனான தனது வர்த்தக, பொருளாதார உறவுகளை ஒரு சிறிய நாடான இலங்கைக்காக இழக்க விரும்பாது. ஆகவே இவங்கை தமிழர் பிரச்சினைக்கு ஒரு திர்வினை வழங்காதவிடத்து ஒரு தீர்வினை இந்தியா திணிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்படும் போலவே தெரிகிறது என்றார் .



1 comments :

Anonymous ,  August 29, 2011 at 6:10 PM  

JR's period was over,it was something like a ship in the high sea midst of storm and heavy wind.We hope and pray Present president and his government has better ideas and would ride the chariot to the correct path to create a prosperous Srilanka.Negative predictions cannot
bring anything to the country,after all it is a curse.The country needs something productive and not destructive.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com