Thursday, August 25, 2011

அவசரகால சட்டம் நீக்கமும் அரசியல் கட்சிகளின் கருத்தும்

நாட்டில் அமுலில் இருந்த அவசரகாலச் சட்டத்தை நீக்கியதற்கு பல்வேறு கட்சிகள் பலவிதமான கருத்துக்களை வெளியிட்டுள்ளன

ரணில் விக்ரமசிங்க

நாட்டில் அமுலில் இருந்த அவசரகாலச் சட்டத்தை நீக்கியதற்கு ஜனாதிபதி மஹிந்த

ராஜபக்ஷ்வுக்கு நன்றி தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க இதன்மூலம் ஜனாநாயகத்துக்கு ஆரம்பகட்ட வழிவகுப்பட்டுள்ளது என தெரிவித்ததுள்ளார்

அவசரகால சட்டம் தளர்த்தபட்ட போதிலும் எதிர்காலத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டியுள்ளதாகவும் அதற்காக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்; என தெரிவித்துடன் அவசரகாலச் சட்டம் போன்று இன்னும் பல சட்டங்களில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ரில்வின் சில்வா

நாட்டில் நடைமுறையிலுள்ள அவசரகாலச் சட்டத்தை நீக்குவதென அரசு எடுத்துள்ள முடிவானது ஜனநாயகத்தை மதிக்கின்ற மக்களுக்கு கிடைத்துள்ள பெருவெற்றியாகுமென ஜேவிபி யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் இச்சட்த்தினை நீக்குமாறு தமது கட்டி தொடர்சியான அழுத்தத்தினை அரசிற்கு கொடுத்துவந்ததாகவும் ,அவர் குறிப்பிட்டுள்ளார்.

அநுர பிரியதர்ஷன யாப்பா

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவிடம் லிபிய தலைவர் கடாபிக்கு நேர்ந்துள்ள தலையெழுத்து தமக்கு நேரும் என்ற அச்சத்திலா அரசு அவசரகாலச் சட்டத்தை நீக்கியது என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது, அதற்கு மறுப்புத் தெரிவித்த அமைச்சர், யுத்தம் நிறைவடைந்து நாட்டு மக்கள் அமைதியாக வாழக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதால் மாத்திரமே அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதாகவும் இந்த அரசாங்கம் எவருடைய அழுத்தங்களுக்கும் கீழ்படியாது எனக் குறிப்பிட்டார்.

டக்ளஸ் தேவானந்தா

இதுவரை காலமும் நடைமுறையில் இருந்து வந்த அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நீக்கியிருப்பது சகலருக்கும் மகிழ்ச்சி தரும் விடயமாக இருப்பினும், இச்சட்டத்தை நீக்குவதற்காக உருவாக்கப்பட்ட சாதகமான இன்றைய சூழலை தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டியது சகலரதும் கடமையாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு

வடக்கு கிழக்கில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு அவசரகாலச்சட்டத்தை நீக்குவது மாத்திரம் போதுமானதல்ல என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

1 comments :

Anonymous ,  August 26, 2011 at 10:54 AM  

The government is doing it's best to restore peace and order in north and east,the communities and the representatives should and must oblige to set examples to restore peace and order in their provinces and not obstructing the government always.These songs we've heard for years and years.We're fed up, fed up and it is enough now.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com