Sunday, August 14, 2011

நாட்டு மக்ளின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ள கிறீஸ் பூதம்.

நாட்டின் பல இடங்களிலும் கிறீஸ் பூதம் தொடர்பான பிரச்சினை தலை விரித்தாடுகிறது. இதன் காரணமாக பல இடங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்துடன் அப்பாவிகள் சிலர் கொல்லப்பட்டும் பலர் தாக்கப்பட்டுமுள்ளனர். இச் சம்பவம் தினமும் தொடர் கதையாகிவருகிறது.

ஊடகங்களிலும் இது தொடர்பான செய்திகள் முக்கிய இடம் பிடித்துள்ளன. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பலர் கொள்ளை ,திருட்டு, வழிப்பறி மற்றும் பெண்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யும் செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக பொது மக்களுக்கு தொல்லை கொடுத்த பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொது மக்களும் சிலரை பிடித்து நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்னர். அப்புத்தளை பிரதேசத்தில் பொது மக்கள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் தமிழர்கள் எனவும் சிங்கள இனத்தை சேர்ந்த அக்கா , தங்கயை திருமணம் செய்துள்ள தரை விரிப்புப் புடைவை எனப்படும் காபட் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் என்றும் பின்னர் தெரியவந்துள்ளது.

பொது மக்கள் மர்ம மனிதர்கள் சிலரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்டைத்த போது பொலிஸார் அவர்ளை விடுவித்தார்கள் என்ற என்ற கோபத்தில் பொது மக்கள் சில இடங்களில் எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.

பொது மக்கள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது என்பது பொலிஸாரின் உத்தரவாகும்
இதேவேளை,.சட்டத்தை மீறினால் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ள்ளது.

கிறீஸ் பூதம் குறித்து மக்கள் பீதியடையத் தேவையில்லை எனவும் அவ்வாறு சந்தேகத்திற்கிடமான யாரையாவது அவதானித்தால் உடனடியாக 119, 118 என்ற பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு அறியத் தருமாறும் பொலிஸ் தலைமையகம் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது,

பல்லின கலாசாரங்களையும் மற்றும் மதங்களையும் கொண்ட மக்கள் வாழும் இலங்கையின் அழகை இரசிக்க கிராமங்களுக்குச் செல்லும் சிலர் எந்தவொரு பொறுப்புமின்றி தாக்கப்படும் சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளன.

கிறீஸ் பூதம் என்ற பெயரில் இந்த அசம்பாவிதங்கள் அண்மையில் நடைபெற்று வரும் நிலையில், கொலை செய்யும் அளவிற்கு சிலர் வதந்திகளைப் பரப்பி விநோதம் புரிந்து வருவதை பொலிஸார் அறிந்துள்ளனர்.

யுத்தம் நிறைவடைந்து அமைதியான சூழல் காணப்படும் நிலையில் அநேகமான வெளிநாட்டவர்கள் இலங்கை வருகின்றனர். எனவே புத்தியுள்ள இலங்கை மக்களாக பொறுப்புடன் செயற்படவேண்டும்.

நீதியை நிலைநாட்ட சந்தர்ப்பம் உள்ள நிலையில் பொறுப்பின்றி தாக்குதல் நடத்துவது மற்றும் தீ வைத்து எதிர்ப்புத் தெரிவிப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் யாராக இருந்தாலும் அனைவரும் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.இஸட் ஷாஜஹான்

1 comments :

S.Thevarajan ,  August 14, 2011 at 1:02 PM  

Sincere thanks to the Ilankai Net for its consoling and realistic explanation. It is quite common in Sri Lanka that very often some stories beyond scientific explanation are fabricated by irresponsible and good-for nothing people. It is a pleasure for them but it is a torture for many people who cannot perceive what is truth. It is a damage to the entire society. Those who are responsible for these type of fabricated stories should be identified and given maximum punishment. This is not a joke.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com