வெள்ளைக்கொடி கதை பச்சப்பொய் என்கிறார் தமிழ் செல்வனின் மனைவி.
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின்போது வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த புலித்தலைவர்களை இராணுவத்தினர் சுட்டுக்கொன்றதான குற்றச்சாட்டுக்கள் அப்பட்டமான பொய்யென தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்செல்வன் மனைவி சசிரேகா றிவிர பத்திரிகையின் ஆசிரியர் சாமர லக்ஷான் குமாரவுடனான நேர்காணலில் உறுதியுடன் கூறுகிறார்.
இராணுவத்தினருடனான சண்டையின்போதே அவர்கள் உயிரிழந்தார்கள் என மேலும் தெளிவாகக் கூறுகிறார்
வெள்ளமுள்ளிவாய்கால் பிரதேசத்தில் சிக்கியிருந்த சசிரேகா பொதுமக்களுடன் பொதுமகளாக மே 16 ம் திகதி ராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வந்தடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது தான் பல தடவைகள் இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வர முயன்றதாகவும் புலிகள் தன்னை தடுத்து வைத்திருந்தாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இங்கு இடம்பெறாத விடயங்களை வைத்து புலம்பெயர் தமிழர் மேற்கொள்ளும் பிரச்சாரங்கள் ஒட்டுமொத்த தமிழினத்தையும் அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லுமென அவர் கூறுகின்றார்.
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற விடயங்களை நன்றாக அறிந்தவர்கள் தாங்களே எனவும் புலம்பெயர் தமிழர் அல்லர் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
0 comments :
Post a Comment