இராணுவ சட்டத்தை மீறிய மேஜர் ஜெனரல்
இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிரகள் மட்டும் பயன்படுத்தக் கூடிய உல்லாச பங்களாவை தனது பெயரில் ஒதுக்கி, அதை கனிஷ்ட இராணுவ அதிகாரி ஒருவருக்கு சட்ட விரோதமான முறையில் பெற்றுக் கொடுத்த மேஜர் ஜெனரல் ஒருவருக்கு எதிராக இராணுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கண்டியில் அமைந்துள்ள 'ஜெனரல் ஹவுஸ்' என்ற இராணுவ பங்களாவை குறிபிட்ட மேஜர் ஜெனரல் தனது பெயரில் ஒதுக்கி வைத்துக் கொண்டு, அதை தமக்கு நெருக்கமான மேஜர் ஒருவருக்கு அவரது குடும்பத்துடன் தங்குவதற்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.
அண்மையில் இடம் பெற்ற கண்டி பெரஹரவை பார்ப்பதற்கு தனத குடும்பத்துடன் சென்ற அந்த மேஜர் 'ஜெனரல் ஹவுஸ்' பங்களாவில் சட்ட விரோதமாக தங்கியமை தொடர்பாக இராணுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்று என செய்தி கசிந்துள்ளது.
0 comments :
Post a Comment