Monday, August 29, 2011

தரங்குறைந்த பொருட்களை இறக்குமதி செய்வோருக்கு எதிராக உடனடி நடவடிக்கை வேண்டும்.

அண்மைக் காலங்களில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தரங்குறைந்த பெற்றோல், சீமெந்து மற்றும் மருந்து வகைகள் தொடர்பாக அவைகளை இறக்குமதி செய்த நபர்களுக்கு எதிராக இது வரை எந்தவித விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு ஆதரவான வியாபரிகளால் செய்யப்பட்டுள்ள இந்த மோசடி தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு போதியளவு ஆதாரங்கள் இருந்த போதிலும் அவைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன் நெத்தி குறிப்பிட்டார்.

இதன் முலம் மக்களின் பணமே வீணடிக்கப்பட்டுள்ளது எனவும் இது போன்ற நாச வேளைகளுக்கு உதவுவது தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானங்களை கண்டனம் செய்ய வேண்டும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

1 comments :

Anonymous ,  August 29, 2011 at 6:45 AM  

Corruption,mismanagement,favourism, and nepotism should be wiped by a government to have a good administration,which can do a lot to their poor citizen.politics is not a hobby,it's a sacrfice to the prosperity of the country.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com