Saturday, August 20, 2011

ஸ்பெயினில் போப் ஆண்டவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மேட்ரிட்டில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்தில் இளைஞர்களுக்கான பிரத்தேக பிராத்தனைக் கூட்டம் நடந்து வருகிறது. இதன் நிறைவு விழா நாளை நடக்க உள்ளது. விழாவின் நிறைவு விழாவில், போப் பெனடிக்ட் பெனடிக் கலந்து கொள்ள உள்ளார். அதிக பொருட்செலவில் நடத்தப்படும் கிறிஸ்துவ இளைஞர் திருவிழாவி்ற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதில் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பெரும் பொருளாதார சரிவில் தவித்து வரும் ஸ்பெயின் நாட்டில், இவ்வளவு பொருட்செலவில் இளைஞர் கூட்டம் நடத்த தேவையில்லை என எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த கூட்டத்திற்கு போப் ஆண்டவர் வருவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com